உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

சரிந்த சாம்ராஜ்யங்கள்


 கள், உலர்ந்த மலர்கள், சோற்றுப்பருக்கைகள், அவிர்ப் பாகத்தை அளவில்லாமல் தின்று மயக்கமேறி மண்டபத்தின் படிகளிலே உருண்டுக்கிடந்த மாமிச மலைகள், மோப்பத்தால் வாலைக்குழைத்துக்கொண்டு வந்த நாய்கள், இருண்டவுடன் ஊளையிட்ட நரிகள் ஆகிய இவைகளே சரிந்த சாம்ராஜ்யங்களின் அடையாளங்களாக ஏட்டில் இடம் பெற்றிருக்கும் எழுத்துருவங்கள்.

இன்னும் பல

பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு இருட் குகையிலே மாண்டுவிட்ட கிரேக்க மன்னன் பெரிக்லசின் சோகக் காட்சிதரும் உருவச் சிலை. ”பழைய சின்னங்களை அழிக்காதே” என்று ஆங்காங்கே தொங்கவிடப்பட்டிருக்கும் சர்க்காரின் எச்சரிக்கைப் பலகைகள், சரிந்திருக்கும் செஞ்சிக் கோட்டை, மொகலாய மன்னன் ஷாஜஹானின் சிறப்பின் மயிலாசனம், செங்கோட்டை, போரில் மாண்ட மாவீரர்களின் அடையாளச் சின்ன மான பிரமிட் கோபுரங்கள்.

புகைவடுக்கள் படர்ந்து சாய்ந்து நிற்கும் கோட்டைச் சுவர்கள், தனது பழைய செல்வாக்கை நினைத்து நினைத்து கண்ணீர்வடிக்கும் ரோம், நைல் நதி வெள்ளத்தைக் காட்டிலும் இரத்த வெள்ளம் அதிகமெனக் காட்டிய சீசர்கால எகிப்து மக்கள், மதிமயக்கத்தால் தன் செங்கோல் சுதியை மீட்டிக்கொண்டிருந்த மஞ்சு சர்க்காரின் தலைநகராம் நான்கிங், சீன சாம்ராஜ்யத்தை ஒருகாலத்தில் அழித்துத் தன்கொடி பறந்தாட சூழ்ச்சி செய்த வெள்ளையருக்குச் சொந்தமாயிருந்த துறைமுகங்களான காண்டன், பூ செள, சுங்கிங். நான்கிங், தேடுவாரற்று தரையில் புதைந்துகிடக்கும் துருப்பிடித்த ஆயு