சி. பி. சிற்றரசு
13
தந்தையின் வெற்றியைக் கண்டு களித்திருக்க வேண்டிய அலெக்சாண்டர் மன வேதனையடைந்தான். ஏன்? எல்லா நாடுகளையும் தந்தை பிடித்துவிட்டால் தனக்கு பிடிக்க நாடுகள் இல்லாமல் போய்விடுமே என்ற வீரப் பொறாமையால்.
குதிரை
யாராலும் அடக்க முடியாத குதிரை. பெயர் பூஸிபாலஸ் (Bucephalus) அதைத் தொட்டுப் பார்க்க, தட்டிக் கொடுக்க வகையில்லாது குப்புற விழுந்த வீரர்களின் குலை நடுக்கத்தைக்கண்டு கொல்லென சிரித்தான் அலெக்சாண்டர். மனிதனால் அடக்கியாள முடியாததொன்றில்லை, ஆனால் மண்டையில் கொஞ்சம் மூளை வேண்டும். மனதில் ஓர் திடம் வேண்டும், செயலில் நம்பிக்கை வேண்டும், எதிர்ப்புக்களைக் கண்டு அஞ்சுவதொழிய வேண்டும், இவைகளே இவனுடைய கோட்பாடுகள். மற்றவர்களால் அடக்கியாள முடியாத குதிரையை ஒரு நொடியில் அடக்குகிறான்.
மனிதன் நிழல் தெரிந்தவுடனே காற்று வேகத்தில் கிளம்பிவிடும் அந்தக் குதிரையை காலையில் கிழக்கு நோக்கி நிறுத்தினான், நிழல் குதிரைக்கு முன்னால் போகாமல் பின்னால்படவேண்டுமென்ற உபாயத்தைக் கையாண்டு குதிரைமேல் ஏறிக்கொண்டான். அவ்வளவு தான் ஒரே, அடியில் கீழே விழும் பலவீனன் போல் வீழ்ந்துவிட்டது. குதிரையின் முரட்டுத்தனம் ஒன்றும் அலெக்சாண்டரிடம் சாயவில்லை. வீரத்தை மட்டிலும் பயன்படுத்தாமல் விவேகத்தையும் பயன்படுத்தி குதிரையையடக்கிவிட்ட அலெக்சாண்டரைப் பார்த்து பிலிப்-" என்னுடைய இந்த சிறிய சாம்ராஜ்யம்