16
சரிந்த சாம்ராஜ்யங்கள்
குடும்ப நிலை
பிலிப் எவ்வளவோ வீரனாக இருந்தும் தன் குடும்பத்தில் கலகத்தையும் குழப்பத்தையும் உண்டாக்கியிருந்தான். அந்த கொந்தளிப்பை அவனால் அடக்கவே முடியவில்லை. அதன் விளைவால் பிலிப் கொல்லப்பட்டான். தந்தையின் இந்த கோர முடிவுக்குப் பிறகு தன்னுடைய இருபதாவது வயதுக்கு முந்தியே பட்டத்துக்கு வந்துவிட்டான் அலெக்சாண்டார். தன் தந்தையின் இறப்புக்குக் காரணமான சதிக்காரர்களின் சதிச் செயலை மேலும் வளரவிட்டால் தன்னையும் அது தாக்கும் என்று தீர்மானித்து முதன் முதலில் சிங்காதன மேறியவுடனே சதிக்காரர்களை ஒழித்தான். அதற்காக, அவர் கள் வாழ்ந்திருந்த திரேஸ், திபேஸ், இல்லிரியா, தெசேலை முதலான நகரங்கள்மேல் படையெடுத்து அவர்களை அடக்கி ஒழித்தான்.
மேலும் ஊக்கம்
இதில் இவன் கண்ட வெற்றியால் கொரிந்த் (Corinth) நகரத்தில் கூடிய மகாசபை, அலெக்சாண்டரையே படைத் தலைவனாக்கி ஆசியாவை ஜெயிக்க அனுப்பவேண்டுமென்று தீர்மானித்தது. இதை முடிப்பதின்முலம் கொல்லப்பட்ட தன் தந்தைக்கு ஆசியா விஷயமாக இருந்த ஆசையும் நிறைவேற்றப்படுவதாகக் கருதினான்.
ஓராண்டில் ஐரோப்பா
ஒரே ஆண்டு முடிவதற்குள் ஐரோப்பாவை வெற்றி கண்டான். பெர்ஷியாவின்மேல் படையெடுத்து மன்னனை ஒடச்செய்தான். அலெக்சாண்டர் பெர்ஷியாவில் அடைந்த வெற்றிக்கு உறுதுணையாக பெர்ஷிய மன்ன