உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

17



னிடம் மக்கள் கொண்டிருந்த அறுவறுப்பும் காரணமாகச் சேர்ந்தது. அலெக்சாண்டரின் வீரம், பெர்ஷிய மன்னனின் எதேச்சாதிகாரம், கொடுமை, மக்களுடைய ஆத்திரம், புரட்சி ஆகிய இவைகளே பாரசீகத்தின் வீழ்ச்சிக்குக் காரணங்களாகும். மேற்கு ஆசியாவையும் பாரசீகத்தையும், எகிப்தையும் வெற்றிகண்ட அலெக்சாண்டர் ஆசியாமைனரைத்தாண்டி கைபர் போலன் கணவாய்களின் வாயிலிலே நிற்கிறான்.

பூரணகும்பம் புறப்பட்டுவிட்டது

வந்துவிட்டான் அலெக்சாண்டர் என்று தெரிந்தது தான் தாமதம். அன்றந்த பகுதிகளேயாண்டு கொண்டு இந்தியாவின் தலைவாயிலாம் வடமேற்கு எல்லையில் தட்சசீலத்தை தலைநகராகக்கொண்டு ஆட்சி நடத்திய ஆரியகுல அதிபன் அம்பி ஒரு கையில் மாலையுடனும், தன் எதிரே கொன்று குவிக்கப்பட்ட பசுங்கன்றுகளின் இறைச்சியுடனும் கைபர் கணவாயின் திசைநோக்கி பூரணகும்பம் கொண்டு புறப்பட்டான் கிரேக்க வீரனே வரவேற்க.

அம்பி

ஆரிய அம்பி. அரசன் என்ற பட்டத்தைத் தாங்கி நின்றானே. அதற்காகவாவது வாளும் வேலும் வில்லும் அம்பும் கொண்டு படைகளை அணிவகுக்கச் சொல்லி இருக்கக்கூடாதா. வெற்றியும் தோல்வியும் வேந்தர்களுக்கு சாதாரணமான விதியென்றும் அவன் நினைக்க வில்லை. எந்த மண்ணே அவன் ஆண்டானோ அந்த மண்ணில் அவன் ரத்தம் சிந்தவில்லை. எந்தத் தன் சாம்ராஜ்ய எல்லைக்கோட்டில் எதிரியின் காலடிபடக் கண்டானோ அந்த எதிரியின் காலைத் துண்டிக்க அந்த ஆரிய மன்னன் அம்பி களம்புகவில்லை. 2