பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

சரிந்த சாம்ராஜ்யங்கள்



போகும் வழியில்

இந்தியாவில் தான் மேற்கொண்ட படையெடுப்பை அறைகுறையாக முடித்துக்கொண்டு திரும்பும் நேரம் தன் படைகளுக்கு விருந்தொன்று நடத்துகின்றான் அலெக்சாண்டர். அதற்கு முந்தியே தனக்குக் கிடைத்த பொருள்களனைத்தையும் தன் படை வீர்ர்களே எடுத்துக் கொள்ளும்படிச் சொல்லிவிட்டான். இவன் தனக்காக எதையும் வைத்துக் கொள்ளவில்லை. இவனுடைய தாராள சிந்தையைக் கண்ட பெரடிகாஸ் என்ற வீரன், "தாங்கள் ஜெயித்த நாடுகளில் கிடைத்த பொருள்களையெல்லாம் எங்களை எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லி விட்டீர்களே, தங்களுக்காக என்ன வைத்துக்கொண்டிருக்கின்றீர்கள்,” என்று கேட்கிறான். எனக்கா நம்பிக்கை (Hope) என்ற ஒன்றிருக்கிறது. அது ஒன்றே எனக்குப் போதும், என்று பதிலளிக்கிறான் அலெக்சாண்டர். இப்படிச் சொன்ன இவன்தான் மற்றோர் நாள் நடந்த விருந்தொன்றில், ’ஒரு அம்பு நமது வீரர் அலெக்சாண்டரை குறிபார்த்துவந்தது, அதைத்தடுத்து நிறுத்தி இவர் உயிரைக் காப்பாற்றினேன் என்கிறான் ஒரு வீரன். அது உண்மையாக இருக்கலாம், அல்லது அந்த நிகழ்ச்சி செழும்புழுதி கிளம்பிய ரணகிளத்தில் அலெக்சாண்டருக்குத் தெரியாமல் யிருந்திருக்கலாம். அல்லது இதைக் கேட்ட அலெக்சாண்டர் ’இருக்கலாம்’ என்று தலையை கெளரவமாகவும் ஆட்டி இருக்கலாம். ஒரு சிறிய புன்சிரிப்பை, இப்படிச் சொன்ன போர் வீரனுக்குப் பரிசாகத் தந்திருக்கலாம். ’என்னை நீ காப்பாற்றியது எனக்காக அல்ல உன்னை மீண்டும் நான் கிரேக்கத்துக் கொண்டு சேர்க்க வேண்டுமே என்ற உன் சுயநலத்தால் செய்திருக்கலாம் என்று கேலியாக