உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

21



நையாண்டி செய்திருக்கலாம். ஆனால் அலெக்சாண்டர் இவைகளில் ஒன்றையுமே செய்யவில்லை. கோபத்தால் கொதித்தெழுந்து அந்த போர் வீரனை விருந்து மண்டபத்திலேயே குத்திக் கொன்றுவிட்டான். மடிந்தான் போர் வீரன். இச்செய்கை மாண்ட போர் வீரனுக்கு பட்ட அடியல்ல. அலெக்ஜாண்டரின் வீரத்துக்கு மட்டிலும் பட்ட அடி யென்பதுமல்ல, அவனது மாண்புக்கும் ஒழுக்கத்துக்குமே பட்ட அடி. அவனது மாசற்ற வீரத்தின் மண்டையிலே விழுந்த பேரிடி.

அலெக்சாண்டர் ஆத்திரத்தால் செய்துவிட்டான். அன்றுவரை பளிங்குபோல் இருந்த அவனது உள்ளம் அன்று தொடங்கி கலங்கிய நீர்த் தேக்கம் போலாய்விட்டது. வேதனைப்பட்டான். எனினும் தன்னால் அநியாயமாகக் கொல்லப்பட்ட வீரன் இறந்தவன் இறந்தவன்தான். ஒரு கிரேக்கனின் உயிர் அதே கிரேக்கத் தலைவனின் முன்கோபத்திற்கு இந்திய மண்ணில் இறையாயிற்று.

முடிவு

இவ்வளவும் செய்துவிட்டு தன் தாயகம் திரும்புகிற போது மெசபடோமியா என்னும் இடத்தில் கடுங் காச்சலால் தன்னுடைய முப்பதாவது வயதில் இறந்து விட்டான். அவனுடைய பெயரை இந்த இருபத்து மூன்று தலைமுறைகள் சொல்லிக்கொண்டே வருகின்றன. என்றாலும் அவன் கண்ட சாம்ராஜ்யங்கள் ஏட்டிலன்றி நாட்டிலில்லை. சரிந்து விழுந்த பல சாம்ராஜ்ய சம்பவங்களோடு அதுவும் ஒன்றாய் இடம்பெற்று விட்டது.