பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

சரிந்த சாம்ராஜ்யங்கள்



இங்கே நிலைத்து ஆரிய ஆட்சிக்கும் அதன் வளர்ச்சிக்கும் கேடு வந்தால் என்ன செய்வது. இனி தான் ஏற்படுத்தப்போகும் சாம்ராஜ்யத்தில் தன் இனத்துக்கும் மதத்துக்கும் நல்வாழ்க்கையும் நளினமான அந்தஸ்தையும் நிலைநாட்ட வேண்டுமென்று கருதினான். அவன் எண்ணப்படியே முதலில் எல்லாம் கைகூடியது. ஆனால் இறுதியில் ஆரியத்துக்கே அழிவு தோன்றி விட்டது. எந்த சாணக்கியனால் தன் இனத்தின் அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்று ஒரு பெரிய மெளரிய சாம்ராஜ்யம் தோற்றுவிக்கப்பட்டதோ, அதே மெளரிய சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னனான பிரஹதத்தனால் ஆரிய உயர்வுக்கு அபாயம் வந்துவிட்டது என்று தெரிந்த உடனே ஒரு ஆரியனாலேயே பிரஹதத்தன் கொல்லப்பட்டான்.

சூழ்ச் உருவெடுத்தல்

நவநந்தர்களால் தான் அடைந்த அவமானத்துக்குப் பதிலாக அவர்களைபழிதீர்க்கவும், அதே நேரத்தில் அவர்களுக்குப் போட்டியாக ஒரு பலம் பொருந்திய சாம்ராஜ்யத்தை யுண்டாக்கவும் எண்ணினான். இது உள் நாட்டிலிருக்கும் யாருடைய துணை கொண்டும் சாதிக்க முடியாத காரியம் என்றெண்ணினான்.

உள்ளம் பேசுகிறது

"சாணக்கியனே! யோசித்து செய். வெளிநாட்டரசர்களைக் கொண்டுவா, ஆனால் நிலைக்கவிடாதே. இங்கே நீ பழிதீர்க்க வேண்டுமென்று நினைக்கின்றவனை பயங்காட்ட வேண்டுமானல், நீ அழைத்து வருவதாக உத்தேசித்திருக்கிற மன்னனைப் பயன்படுத்திக்கொள். வருபவனை இங்கே நீ நிலைக்கவிட்டால் உன் மதம் உன்