உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

சரிந்த சாம்ராஜ்யங்கள்


 இந்தநாள் ஆரியப்பயிர் தென்னகமண்ணில் முளைக்கவே முடியாது. ஆகவே அந்த யோசனையையும் கைவிடு' என்றெல்லாம் அவன் மனம் அவனை எச்சரிக்கை செய்கிறது. என்றாலும் தான் அன்றந்த அரசக் குளக்கறையில் கொண்ட சூளுரையை முடித்தே தீரவேண்டும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு இப்படியும் அப்படியும் திரிந்துகொண்டிருக்கின்றான்.

அந்த நேரம்தான் இமயத்தின் அடிவாரத்தில் மாசிடோனிய மகாவீரன் அலெக்சாண்டரின் பேரிகை சப்தம் கேட்ட நேரம். சூரியனைக் கண்ட செந்தாமரை என முகம் விரித்தான் சாணக்கியன். அவன் கொண்ட களிப்பு அடுத்த வினாடியே நீர் மேல் எழும்பிய குமிழி என்றாய் விட்டது. ஏன்? நந்தர்கள் மேலிருக்கும் கோபத்தால் வேற்று நாட்டானை உள்ளே அழைத்து வந்தால் கோசலம், அவந்தி, தட்ச சீலம், கோசாம்பி மகதம் முதலான சிறிய சிறிய நாடுகளை ஆண்டுகொண்டிருக்கும் தன் இனத்தாரான ஆரிய மன்னர்களின் கெதி என்னாகுமோ என கெதிகலங்கினான் சாணக்கியன். அடுத்த வினாடியே அவனுக்கொரு ஆறுதல் கிடைத்தது அலெக்சாண்டரை தானே முதலில் சந்திக்காத வகையில் தன் இனத்தானான ஆரிய மன்னன் அம்பியே இறைச்சி விருந்தளித்து ஏதன்ஸ் வீரனே உள்ளே அழைத்துக் கொண்டான். இனி அவனைக் கொண்டு நந்தனைத் தொலைத்துவிடலாம் எனத் திட்டமிட்டுவிட்டான். நந்தன் ஆளுகையை ஒரு முறை வலம் வந்தால் போதும் எனக் கேட்டுக் கொண்டான் சாணக்கியன். அம்பி தந்த போதையில் மதிமயங்கியிருந்த அலெக்சாண்டர் அவ்வண்ணமே செய்வதாக ஒப்புக்கொண் டான். எக்காளமிட்டான் குடுமியை முடிக்காத சாணக்கியன், எதிரொலித்தது இமயம் கேலியாக. அந்த