சி. பி. சிற்றரசு
27
வான் முட்டி நிற்கும் பனி மலையில் வதிவதாக நினத்துக் கொண்டிருந்தானே தபோதனர்கள் அவர்கள் தன்னை ஆசீர்வதிப்பதாக எண்ணி மேலும் பூரித்தான். அலெக்சாண்டர் நந்த நாட்டில் காலடி வைக்காமுன்னம், நந்தன் கொல்லப்பட்டான். குற்றமற்ற நந்தன் சிந்திய ரத்தத்தில் நெளிந்த கிருமிகள் சாணக்கியன் பெயரைச் சொல்ல அஞ்சி அஞ்சி செத்துவிட்டன. அதையே செய்து முடித்தனர், சரித்திராசிரியர்கள் கொலைக் குற்றம் சாணக்கியனுடையதல்ல வென்றால் அவன் வழி வந்தவர்கள், இல்லையானால் வாளுக்கே கை கால் முளைத்தா நந்தனின் கழுத்தைக் துண்டித்திருக்கும்? எப்படியோ முடிந்தான் நந்தன். சாணக்கியன் வஞ்சமும் அலெக்சாண்டரின் அபிமானமும் சேர்ந்து ஆரிய நஞ்சால் அபிஷேகம் செய்யப்பட்ட சந்திரகுப்தன் அரியாசன மேற்றப்பட்டான்.
எந்த ஆரியனால் சந்திர குப்தனுடைய சாம்ராஜ்யம் தோற்றுவிக்கப்பட்டதோ அதே ஆரியத்துக்கு இது மிக மிகக் கடமைப்பட்டதாகிவிட்டது. ஆரியம் இதைத் தோற்றுவித்ததற்குக் காரணம் முன்பு சொன்னவைகள் மாத்திரமல்ல, இந்த சாம்ராஜ்யத்தால் ஆரியத்திற்கு போடப்படும் அஸ்திவாரம். அகிலம் அழியும் வரையிலும் யாராலும் அசைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பதிந்துவிட வேண்டுமென்று எண்ணியதும் குறிப்பிடத்தகுந்ததாகும், ஆனால் சாணக்கியன் எண்ணத்தில் இடிவிழுந்ததைப்போல் மெளரிய சாம்ராஜ்யம் சரிந்ததற்கும் புத்தர் பேரொளி தோன்றியதற்கும் ஆரியம் அடிப்பட்ட பாம்பென துள்ளித் துடித்து இங்கு மங்குமாக வாலை மாத்திரம் ஆடடிக்கொண்டிருந்ததற்கும் சரியாய் விட்டது.