30
சரிந்த சாம்ராஜ்யங்கள்
இவன் செய்த இந்த அரசியல் ஏற்பாட்டால் சிந்து நதி முதல் பிரமபுத்ரா வரையிலும், வடக்கே இமாலயம் முதல் தெற்கே விந்தியம் வரையிலும் ஒரு பலம்பொருந்திய மெளரிய சாம்ராஜ்யம் நிலைக்கக் காரணம்மாயிற்று.
ஆனால் சந்திரகுப்தன் சிங்காதனமேறிய நான்கு ஆண்டுகளில் அலெக்சாண்டரின் தளபதிகளிலே மிகத் திறமையுடையவனும், கிரேக்கர்களால் வெற்றி வீரன் (நிக்கோடார்) என்று புகழப்பட்டவனுமான செலுக்கஸ் காலஞ்சென்றதன் தலைவன் அலெக்சாண்டரின் இந்திய வெற்றிகளை நினைத்து மீண்டும் கிரேக்க மண்டலத்தின் கொடியை இந்திய மண்ணில் நிலை நாட்டவேண்டுமெனக் கருதினான். முன்பு இருந்தபடியே வட பகுதி சிறிய சிறிய நாடுகளாக இருக்குமென எண்ணினான். அம்பி போன்ற தொடை நடுங்கிகளும் அவன் சக மன்னர்களும் முன் போல விருந்து நடத்தி விழுந்து கும்பிடுவார்கள் என்று மனப்பால் குடித்தான்.
அந்த நம்பிக்கையாலேயே சிந்து நதியைக் கடந்து இந்தியாவுக்கு வந்தான். ஆனால் அவன் கனவு பகற் கனவாக முடிந்தது. மெளரியப் படை அணிவகுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. போர் தொடங்கினால் நிச்சயம் விழுந்து விடுவோம் என்று நினத்தான் செலுக்கஸ் (நிக்கோடார்) பெர்ஷிய சாம்ராஜ்யத்திடமிருந்து தன் தலைவன் அலெக்சாண்டர் சிந்து சமவெளிக்கு மேற்கே காபூல் வரையிலும் வென்றிருந்த நாடுகள் மகா மெளரிய சந்திரகுப்தன் காலடியில் விழவேண்டி வந்தது மாத்திரமல்ல நிக்கோடார் என்ற செலுக்கஸ் தன் மகளை சந்திரகுப்தனின் மகன் ஒருவனுக்குத் திருமணம் செய்துவைத்து அவனுடைய அபிமானத்துக்குரியவனாய் அரச அவையில் தன் நாட்டு தூதுவன் என்ற