பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

31


பேரால் மெகஸ்தனிஸ் என்பவனுக்கு இடந் தேடித் தந்துவிட்டுப் போய்விட்டான்.

முடிவு

தான் சிந்திய ரத்தத்துக்கதிகமாக வெற்றி கண்ட சந்திரகுப்தன் இருபத்துநான்கு ஆண்டுகள் நாட்டை யாண்டு கி. மு. 296-ல் முடி சாய்ந்துவிட்டான். மெளரிய மூவேந்தர்களில் முதல்வனான இவனே போர்க்குணம் படைத்தவனும், ஆளும் திறமையுடையவனுமானவன் என வரலாற்றாசிரியர்கள் வர்ணிக்கின்றனர்.

சற்றொப்ப ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு தென் வேந்தர்கள் பெற்றிருந்த தெளிந்த அரசியல் அறிவை வடவேந்தர்களில் சிலர் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்புதான் பெற்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பிந்துசாரன்

இவன் சந்திரகுப்தனின் மகன். குடி, கேளிக்கை இந்த இரண்டும் மிதமாக இருக்கும் நேரத்தில் தர்க்க ஞானத்தை வளர்த்தலே இவனுடைய பொழுதுபோக்கு. இவன் வாழ்ந்த காலம் சண்டையில்லாத சமாதான காலம். தன் தந்தை போட்டுவிட்டுப்போன அரசியல் பாட்டையிலேயே தன் அரசியல் தேரை வெகு சுலபமாக செலுத்தியவன் இவன். இவன் தன் சொந்த நாட்டில் கிடைத்த பழங்களையும் மதுவையும் சுவைத்து சுவைத்து நாத்தடித்துப்போய் கிரேக்க நாட்டுக்கு ஒரு கடிதம் எழுதி, அதில் :-பழங்களையும், மதுவையும், ஒரு தர்க்க ஞானியையும் அனுப்பும்படிக் கேட்டிருந்தான். இவன் கடிதத்தைக் கண்ட கிரேக்க சர்க்கார், பழங்களையும் மதுவையும் வேண்டுமானால் விற்போம், ஆனால் எங்கள் நாட்டில் தோன்றிய எந்த அறிஞனையும் நாங்கள் விற்ப