உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

சரிந்த சாம்ராஜ்யங்கள்


இல்லை என்று பதில் எழுதிவிட்டது. இந்த முறையில் நாநீண்ட வரையில் சுவைத்து அரசபோகத்தில் திளைத்து காலத்தைப் போக்கி கண்மூடி விட்டவன் இவன்.

அசோகன்

தன் தந்தை பிந்துசாரன் ஆட்சியிலிருந்தபோது தட்சசீலத்தின் கவர்னராக வேலைபார்த்து பல அரசியல் நுணுக்கங்களை தெள்ளத் தெளிய தெரிந்து வைத்துக் கொண்டிருந்தான் அசோகன்

பரம்பரைப் பாத்தியப்படி ஆட்சி கிடைப்பதாயினும் மாற்றானை போர்க்களத்தில் புறங்கண்ட வீரனாயிருந்தாலும், மக்களாகவே வலிய முன்வந்து மணிமுடி தர நேர்ந்தாலும், தன் அறிவாற்றலால் ஜெகத்தைத் தன் பால் இழுத்தவனாயிருந்தாலும், வாளேந்தி தோள் தட்டி குருதி களத்தில் துள்ளிக் குதிப்பவனா யிருந்தாலும் இடையிலே ஏதாவதொரு சூழ்ச்சி, அல்லது துக்ககரமான நிகழ்ச்சி நடைபெறாமல் பட்டத்திற்கு வரமுடியாமல் இடையிலே எதோ ஒரு வஞ்சனைச் செயல் வட நாட்டு அரசியல் அரங்கில் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தது என்பதற்கு விதிவிலக்கில்லாமல், மாபெரிய மெளரிய சாம்ராட் என்றழைக்கப்பட்ட அசோகனும் தன் அண்ணனை எதிர்த்துத்தான் கிருஸ்துவுக்கு முன் 268-ல் ஆட்சிக்கு வந்தான். தான் ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகே முடிசூட்டு விழா நடந்தது. தான் கற்றிருந்த அரசியலில் போரைப் பற்றியே மிகத் தெளிவாகத் தெரிந்துகொண்டிருந்தான். ஆனால் மற்றவைகளில் அவ்வளவு திறமை குறைந்தவன் என்று சொல்லமுடியாமல் எல்லாவற்றிலும் மிக நேர்த்தியான தேர்ச்சி பெற்றிருந்தான். என்றாலும் போரைப் பற்றித் தெரிந்துகொண்டிருந்தது மிக அதிகம் எனலாம்.