சி. பி. சிற்றரசு
33
மெளரிய குல திலகமும், மகாமெளரிய அரசியல் கோபுரத்தை எழுப்பியவனும், அந்த அரசியல் முழக்கத்தைத் தனது ஆட்சியின் நான்கு திசைகளிலும் கேட்கும்படி விரிவுபடுத்தியவனுமான சந்திர குப்தன் காலத்தில், சாணக்கியன் தந்திரத்தாலும், சந்திரகுப்தன் சன்மானத்தாலும், கூடியிருந்த ஆரிய மதத் தலைவர்களின் புன்சிரிப்பாலும், அலெக்சாண்டர் தந்த பிச்சையாலும் வேரூன்றி, யாராலும் அசைத்துப் பார்க்கமுடியாதிருந்த ஆரியம், அசோகன் காலத்தில் அடியோடு தொலைந்தது. புத்தர் காலத்துக்கும் அசோகன் காலத்துக்கும் கால இடைவெளியான இருநூற்றி ஐம்பது ஆண்டுகள் ஆரியர்கள் புத்தமத விரோதிகளாக இருந்தும், மகதத்தையாண்ட பிம்பிசாரன் அஜாதசத்ரு போன்ற மன்னர்களால் புத்த மகம் ஆதரிக்கப்பட்டு எப்படியோ சமுதாயத்தின் எல்லா பாகங்களிலும் பரவத் தொடங்கிவிட்டது. புத்த மதம் சாதாரண மக்களால் ஆதரிக்கப்பட்டிருந்தால் எப்போதோ ஆரியர்கள் அதைத் தொலைத்திருப்பார்கள் புத்த மத மன்னர்கள் கையில் தாங்கியிருந்த செங்கோல் அதற்கு பங்கம் வரவிடவில்லை, அரியாசனத்தைவிட மேலாசனத்திலமர்ந்திருந்தது. புத்தர் புன்னகையை பூதளத்துக்கறிவித்தவன், அன்பின் ஜீவநாடியான அப்பேராளன் கண்ட முடிவை ஜெகத்தின் சிகரத்தில் ஜெகஜோதியாக்கியவன் அசோகன்
அசோகன் ஆட்சிக் தொடக்கத்தின் சரித்திர பூர்வமான ஆதாரங்கள் கலிங்கப் போரிலிருந்துதான் தொடர்ச்சியாகக் கிடைக்கிறது.
கலிங்கக் கோன் காரவேலன்
மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா என்ற ஆறுகளின் இடையே அமைந்திருந்த கலிங்கம், காரவேலன்