34
சரிந்த சாம்ராஜ்யங்கள்
காலம் வரையிலும் மற்ற எவராலும் படையெடுக்க முடியாத சிங்க நாடெனத் திகழ்ந்தது. அலெக்சாண்டரின் இந்திய படையெடுப்பில் இடம் கொடுக்காத கலிங்கம், ஆரியா வர்த்தத்தையாண்ட ஆரிய மன்னர்கள் அணுக அஞ்சிய கலிங்கம், தன் சூழ்ச்சித் திரை கலிங்கத்தின் வாளால் கிழித்தெரியப்படக்கூடும் என்று பயந்த சாணக்கியன் திரும்பியே பார்க்காத திசையிலிருந்த கலிங்கம். கலிங்கம் என்று நினைக்கும் பகை நாட்டரசர்கள் உள்ளம் கலங்கும் அளவுக்கு வீரம் பெற்றிருந்த கலிங்கம். மற்ற எந்த படையெடுப்பை யும் தன் நாட்டின் பக்கம் சேராதடித்த செறுகளச் சிங்கம் காரவேலன் ஆட்சி நடந்துக்கொண்டிருந்த கி. மு. 256ல்தான் அசோகன் படைகள் கலிங்கத்தை முற்றுகையிட அணிவகுத்து நின்றுவிட்டது. கலிங்கத்தில் அதுவரைக் கண்டிராத யுத்த முழக்கம் கேட்டது. இது காரவேலன் கனவிலும் நினைக்காதது. எதிரிகளே தோன்ற முடியாது என்ற நம்பிக்கையால் மூடிய ஆயுதச் சாலைகள் மூடிய வண்ணம் இருந்த கலிங்கம், அசோகன், யுத்தபேரிகைக் கேட்டவுடன் ஆயுதபாணியாகவேண்டி வந்தது. தன் மூதாதையர்கள் முயன்று முயன்று முடியாமல் கைவிட்டுவிட்ட கலிங்கத்தைக் கலக்கியே தீர வேண்டும் என்ற ஆத்திரத்தால் கலிங்கத்தின் தலை வாயலை ஆவேசமாகத் தட்டினான் அசோகன். காரவேலன் கொண்டிருந்த பெரு நம்பிக்கை புழுதி மயமாய்விட்டது. அதுவரை கலிங்கம் வீரப் பட்டயத்தில் பெற்றிருந்த முதலிடத்தை இழக்காதிருக்கவேண்டுமானால், கலிங்கக் காவலன் இனி சூர வேலனாகவோ, கோர வேலனாகவோ ரணகளம் வந்தேதீர வேண்டும். இல்லையானல் அவனை நாரவேலன் என்றழைத்து