பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

சரிந்த சாம்ராஜ்யங்கள்



அந்த போரில் மாண்டவர்கள் ஒரு லட்சம் பேர்கள். லட்சத்தி ஜம்பதினாயிரம் பேர்கள் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். சண்டைக்கு ஒரு விதத் தொடர்புமில்லாத சாதாரணக் குடிகள், வயோதிகர்கள், வனிதையர், பச்சிளங் குழந்தைகள், அழிந்தனர். அழகான அங்காடிகள் அழிந்தன. வாணிபப்பெரு மக்கள் சுருண்டு சுருண்டு விழுந்தனர். ஜய்யோ என அலறி அங்கெங்கேயே துடிதுடித்து உயிர் விட்ட நகர மக்களின் தொகை எண்ணிலடங்கா, போர் என்பதையே கேள்விப்படாத மக்கள், நேரில் கண்டறியாத மக்கள், வரலாற்று வாயிலாக மட்டிலும் படித்திருந்த மக்கள், இதிகாசங்களில் சொல்லப்பட்ட கற்பனைக்கே எட்டாத அக்ரோணி, சங்கம், மகாசங்கம் தொகையான மக்கள் மடிந்தார்கள் என்பதை புராணிகர் சொல்ல, பக்தி பரவசத்தால் கேட்டுக்கொண்டிருந்த மக்கள், ஈட்டியையும் வாளையும் பாதுகாவாலர்கள் ஏந்திவர அவர்களுக்குப் பின்னால் தேரில் ஆரோகணித்து மன்னன் நகர் வலம் வந்தபோது ராஜ தரிசனத்திற்காக தெருக்களில் கூடியிருந்த போது இந்த ஈட்டிகளையும் வாளையும் கண்டதல்லாமல் நெஞ்சில் பாய்ந்து செங்குருதிச்சிந்த மரண மெய்திய பயங்கரப் போர்களை நேரில் காணாத மக்கள் அன்று நேரடியாகக் கண்டார்கள். மன்னனுக்கும் மன்னனுக்கும் சண்டையாம். அதில் நம்மண்டைக்கு ஆபத்தில்லையென்று அனாயாசமாக தெருவில் திரிந்த மக்கள் மண்டையிலும் அடி விழுந்ததைக் கண்டனர். போர் என்றால் ஏதாவதொரு குறிப்பிட்ட இடத்தை போர்க் தளமாகத் தேர்ந்தெடுத்து அதில் இருவரும் மோதிக் கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருந்த மக்கள், தங்கள் வீடுகள் தீக்கிரையாவதை, கன்றுகளும், காராம் பசுக்களும், மற்றக் கால் நடைகளும் கட்டைத்தெரித்