பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

37


துக் கொண்டு ஒட முடியாமல் எரியும் நெருப்பில் மடிந்து விட்ட காட்சியை நேரில் கண்டார்கள். என் அண்ணன் வயல் நோக்கி நடந்தானே வழியிலேயே மடிந்தானே, இதுவா போர் என்றலறியவர்களும், காடு வெட்ட கானகம் நோக்கி நடந்தானே காளை, கால் முறிந்து விழுந்தானே, இதுவா யுத்தம் என்று ஓலமிட்டவர்களும், தள்ளாடி நடந்தாளே என்பாட்டி, துள்ளி விழுந்தாளே, இதுவா சண்டை என்று அழுதவர்களும் ஏராளம்.

“ மகாநதி நோக்கி ஒடுகிறது கலிங்கப்படை மடக்குங்கள், விடாதீர்கள். கோட்டையின் தென்புற மதிலை இடித்துத் தள்ளுங்கள். அங்கேதான் கார வேலன் அரியாசனமிருக்கிறதாம். அகழியின் தண்ணிர் சென்னீராகட்டும், யுத்தகளத்தில் பச்சாதாபமென்பது கோழையின் அகராதி, விழ வேண்டும், அல்லது வீர சொர்க்கம் புக வேண்டும். யார் போர் வீரர்கள், யார் அவர்களல்லாதார் என்ற பேதம் பாராட்ட நேரமில்லை. ஆயுத மெடுக்காதார் அகலுங்கள், அப்புறம் என்ற தர்மமொழி நமக்கு வேண்டாம், “ என்றெல்லாம் போர் அரங்கின் எல்லா பக்கங்களிலும் பேசப்பட்டது. அசோகன் புகழ் ஓங்குமளவுக்கு பிணக்குவியலின் உயரமும் ஓங்கியது. கார வேலன் கைவாள் மின்னிய வேகத்தைக் காட்டிலும் வேகமாக கொத்தளங்கள் சரிந்தன, குடலற்று விழுந்தோர் தலை தண்ணீரிலும், உடல் கரையிலும் கிடந்தன. கைகள் குதிரைகளின் குளம்படிக் கடியிலும், தலை அதன் முதுகில் தொங்கியவண்ணமிருந்தன. யானையால் மிதிக்கப்பட்டு உடைந்த போர் வீரர்களின் மண்டைகளிலிருந்து படார் படார் என்று எழுந்த சப்தம் இத்தரத்தாருக்கு எக்காளத்தையும், எதிரிகளுக்கு