உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

சரிந்த சாம்ராஜ்யங்கள்


தின் அடிவாரத்தில் இடி முழக்கம் கேட்டதுண்டா, இல்லை. ரோகிணியாற்றில் போர்ப்பிணங்கள் மிதந்துச் சென்றதுண்டா, இல்லை. கோசலத்தில் மட்டிலுமல்ல, தன் தந்தையின் பகைவன் பிம்பிசாரன் ஆண்ட மகதத்திலாகிலும் மரணகீதம் கேட்கச் செய்ததுண்டா, இல்லை. அந்தப் பேராளன் ஆயுதச்சாலகளை திறக்கவில்லை. அறிவுக்கபாடத்தைத் திறந்தான். கண்களிலே தீக் கணல் காட்டவில்லை. கருணயைக் காட்டினான். ரத்த வாயால் சிரிக்கவில்லை. சித்தம் நொந்து சிரித்தான். ஒரே பிணத்தைக்கண்டான். அதுவும் தன்னால், அல்லது தன்படைவீரர்களால் கொல்லப்படாமல் இயற்கையாகவே மாண்டுபோன வனுடைய பிரேதத்தைக் கண்டான். சித்தம் சோர்ந்து போனான் சித்தார்த்தன். நீர் இவ்வளவு பிணங்களைப் பார்த்தும் மனம் கலங்கவில்லை. அன்று தொடங்கி அவன் விட்டுவிட்ட ஆசைகள் அவ னுடைய மரண பரியந்தம் அவனேத் தொடவே இல்லை. அவனை நாம் கோழை என்று குற்றம்சாட்ட முடியாது. குவலய நல்லோர்களின் மனதிலே கோயில் கொண்டான். குன்றின் மேலிட்ட விளக்கென இன்னும் எத்தன்ன நூற்றண்டு களானலும் அவன் புகழ் மங்காது மறையாது ஒளிவீசியே தீரும். வீரம் அவன் பாலில்லை என்றும் தாங்கள் அவன்மேல் தீராத பழி சுமத்திவிட முடியாது. கையளவுள்ள ஓர் கலிங்க நாட்டை நீர் எதிர்த்துப் போராடினர். அவன் குவலயக் கொடுமை களனத்தையுமே எதிர்த்துப் போராடினான். அவன் எதிர்த்துப் போராடியது மிகச் சாதாரணமானவர்களையல்ல, வன்னெஞ்சக்காரர்களை, மகேசுவரன் பேரால் மாயாவாதம் புரிந்திவர்களை, சிறு சிறு பலிகளின்பேராலி ஒரு பெரிய சமூகத்தையே பலியிட்ட நச்சுக்கொள்கையை, நயவஞ்சகத் தன்மையை,