46
சரிந்த சாம்ராஜ்யங்கள்
"எந்த நேரத்திலும், அந்தப்புறத்தில் இருந்தாலும், உணவுண்ணும் போதாயிலும் அல்லது மலர்ச் சோலேயில் உல்லாசமாய் இருந்தாலும், நான் எப்போதும் தீர்த்து வைப்பதற்குத் தயாராக இருக்கும் மக்களின் குறைகளைப் பற்றி எனக்கு தெரிவிக்க வேண்டுவது அதிகாரிகளின் கடமையாகும். மேலும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள வேலைகளை நிறைவேற்றும்போது அதிகாரிக்குத் தொல்லையோ, அல்லது காலதாமதமோ ஏற்பட்டால், நான் எங்கிருந்த போதிலும், இரவு பகல் எந்நேரமாயினும் எனக்கு அது தெரிவிக்கப்பட வேண்டும். ஏனெனில் நான் பொது நன்மைக்கு உழைக்கவே விரும்புகிறேன்"
இப்படித் தன் கட்டளைகளை யெல்லாம் கல்வெட்டில் சொல்லப்பட்டிருக்கின்றதே தவிர, மற்ற அரசர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையைப்பற்றி சிலாசாசனம் செய்திருப்பதைப் போல அசோகன் தன் சொந்த வாழ்க்கை யைப்பற்றி எந்த கல்வெட்டிலும் செதுக்கி வைக்க வில்லை. அதனால் அசோகனின் தனிப்பட்ட வாழ்க்கைக் குறிப்புகள் சரியாக நமக்குக் கிடைக்கவில்லை.
அசோகன் அரசனாக மாத்திரமன்னியில் சிறந்த ஞானியாகவும், அன்பின் இருப்பிடமாகவும், புத்தரின் தலைசிறந்த சீடனாகவும், முப்பத்தி எட்டு ஆண்டுகள் அரசாட்சியை நடத்தி கி. மு. 226 ல் முடிசாய்ந்தான்.
ஆனால்
இவ்வளவும் பேரும் புகழோடு வாழ்ந்த அசோகன் மாளிகையில் களங்கம் ஒன்று ஏற்பட்டு அசோகனின் மகனே கண்களையிழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.