பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

சரிந்த சாம்ராஜ்யங்கள்


மறுத்தான். மீண்டும் ஆரியம் தலையெடுப்பதை வெறுத்தான். அசோகன் காலத்தில் புத்தில் விரட்டப்பட்டு வெளியே தலை நீட்ட முடியாமல் திண்டாடிய ஆரிய அரவம் மீண்டும் தன் படமெடுக்க இடங்கொடுப்பான் பிரஹதத்திரன் என்று எவ்வளவோ எதிர்பார்த்தனர் ஆரிய மந்திரிகள். முடியவில்லை. வேறு வழியில்லை. எந்த அசோகனின் சக்கரச் சுழலின் வேகத்தைக்கண்டு அவர்கள் நடுங்கினர்களோ, அந்த நடுக்கம், அசோகன் முடிவோடு நின்றுவிட்டது. இனி ஆரியம் தலைதூக்கியாக வேண்டும்.

இதற்குள்ள ஒரே வழி, அரசன் பிரஹதத்திரனைக் கொன்று தீர வேண்டும். சதிச் செய்தனர் ஆரிய மந்திரிகள். தளபதி புஷ்யமித்திரனை விட்டு பிரஹதத்திரனைக் கொலை செய்துவிட்டனர். சாய்ந்த அரசனின் தலையோடு புத்தமதக் கொள்கையும் சாயத் தொடங்கியது. குதூகுலக் கடலில் குளித்தனர். அசோகன் கால முதல் கையில் எடுக்க முடியாமல் தடுத்து நிறுத்திவைக்கப் பட்டிருந்த மதுக் கோப்பை கையில் எடுத்தனர். மதுவுண்ட வாயால் மாமிசத்தை சுவைத்தனர். பல ஆண்டுகள் புகை எழும்பாதிருந்த யாக குண்டங்களில் புகை எழும்பின. அசோகன் ஆணையால் தடுத்து உயிர் காப்பாற்றப்பட்ட பல ஆடுகளும் குதிரைகளும் யாகக் குண்டத்தின் முன்னால் வெட்டப்பட்டன. அவைகள் சிந்திய ரத்தம் கொலை செய்யப்பட்ட பிரஹகதத்திரன் ரத்தத்தோடு கலந்துவிட்டது. எந்த ஆரிய மேன்மைக்காக எந்த சாணக்கியன் என்ற ஆரியனால், எந்த சந்திர குப்த சாம்ராஜ்யம் தோற்றுவிக்கப்பட்டதோ அதே ஆரியகுல அடிமை புஷ்யமித்ரனாலேயே மெளரிய சாம் ராஜ்யம் முடிந்தது. நன்மையெனக் கண்டனர் தோற்று