50
சரிந்த சாம்ராஜ்யங்கள்
ஆகவே அழிந்த மெளரிய சாம்ராஜ்யத்திற்குப் பிறகு முன்னூறு ஆண்டுகளாக சிறுகச் சிறுக வளர்ந்து வந்த ஆரியம் குஷான் சாம்ராஜ்யம் ஏற்படுகிற வரையிலும் கொஞ்ச கொஞ்சமாகத் தலைதுாக்கியது. மகதத்தை ஆண்டு கொண்டிருந்த சந்திரகுப்தனால் மீண்டும் ஆரியம் உயிர்பெற்றது. இந்த குப்தர்கள் தான் ஆரியத்தை ஆதரித்தானே யன்றி, இந்த ஆரியத்தால் தோற்றுவிக்கப்பட்ட சாம்ராஜ்யத்தைக் தொடக்க முதல் எதிர்த்துக்கொண்டே வந்த கலிங்கம் ஒரு பக்கமும் குஷான் அரசு பக்கமும் இருக்கத்தான் செய்தது.
புயல் நுழைந்துவிட்டது
புத்த சங்கங்களில் புயல்போல் நுழைந்துவிட்டது ஆரியம். அந்த கொள்கைகளை அப்படியே ஏற்றுக் கொண்டவர்கள்போல் பாசாங்கு செய்தனர். மொட்டை அடித்துக்கொண்டு காஷாயம் தரித்து புத்த பிட்சுகளாக மாறி அதில் மகாயானம், ஹீனயானம் என்று கடவுளைப்பற்றிய பிரச்னையை வளர்த்து சண்டையை முட்டி விட்டு தங்களுக்குச் சாதகமான இடங்களையும் மடங்களையும் கைப்பற்றிக் கொண்டனர். சற்றொப்ப இந்தியா விலிருந்த எல்லா புத்த சங்கங்களையுமே ஆரியர்கள் தமதாக்கிக்கொண்டு புத்தரை மகா விஷ்ணுவாக்கி ஆண்டவன் எடுத்த பல அவதாரங்கள் புத்த அவதாரமும் ஒன்றென வாய் கூசாமல் சொல்லி வயறு வளர்த்தனர் இந்த வடபரதேசிகள். எதிர்த்துக் கெடுக்க முடியாவிட்டால் அண்டிக் கெடுப்பதையே குலத்தொழிலாக வைத்துக்கொண்ட இவர்கள் இன்றளவும் ஒரு நிரந்தரமான கொள்கை யற்றவர்களாய், எந்த வசதி பெற வேண்டியதாயிருந்தாலும் எதை வேண்டுமானா