பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

51


லும் கொடுத்து தங்கள் நிலையை, தங்கள் வருங்கால சந்ததிகளின் நிலையை சரி பார்த்துக்கொண்டார்கள். இதற்குச் சாதகமாக, முன்பு சாணக்கியனுக்கு ஒரு சந்திரகுப்தன் அகப்பட்டதைப்போல இங்கே ஒரு சந்திரகுப்த ஆரியன் என்பவன் அகப்படுகிறான். இவன் தான் மகதத்தை ஆண்டுக்கொண்டிருந்த லட்சாவி அரசனின் மகள் குமாரதேவி என்பவளை கி. பி. 308-ல் திருமணஞ் செய்துகொண்டு அந்த மகதத்திலும் ஆரியத்தை பரவவிட்டான்.

சந்திரகுப்த ஆரியன்

மகத வேந்தன் மருமகனான இவன் பனிரெண்டு ஆண்டுகளில் சக்ரவர்த்தியாகின்றான். இவன் பேராலும் ராணியின் பேராலும் நாணயங்களை வெளியிடுகிறான். சபாமண்டபத்தில் அரிசேனன் என்பவனை ஆஸ்தான கவிஞனாக நியமிக்கிறான். மொழி, கலை, நாடகம் ஆகியவற்றின் வளர்ச்சியை மிகைப்படுத்தினான். இவன் காலம்வரை பாரதங்கள் இரண்டு, இராமாயணக் கதைகள் இரண்டுமாக இருந்ததை எல்லாம் ஒன்றாக்கி ஒரே பாரதம், ஒரே இராமாயணமாக புதுப்பித்தான். அது வரையில் அவனவன் இஷ்டத்துக்கும் கற்பனைக்கும் எட்டியவாறு எழுதப்பட்டு கண்ட கண்ட இடங்களில் கேட்பாரற்று சிறுசிறு துண்டுகளாக இருந்த மேற்சொன்ன கதைகளை ஒன்றாக்கி சமூகத்தின் நல்ல இரத்த ஓட்டத்தை நஞ்சாக்கிய மாபாதகனும், திராவிடர்களின் சமுதாயப் பகைவனும் இந்த கொடுங்கோலன்தான். சமஸ்கிருதத்தை நீதிமன்ற மொழியாக்கியவனும் இவனேதான். இவனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவன் இவனுடைய மகன் சமுத்ரகுப்தன். இந்த சமுத்ரகுப்த