பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

53


யெடுப்பை எல்லாம் தன்னகத்துக்கு வராமல் தடுத்தவர்கள். புத்தமத பரவலாலன்றி அதற்கு முன்பு இயற்கை யாகவே ஆரியத்தையும், அதன் அறிவுக்கு ஒவ்வாத கொள்கையையும் பலமாக எதிர்த்துக்கொண்டுவந்த திராவிடர்கள் தொடர்ந்து வந்த நான்கைந்து ஆரிய மன்னர்களாட்சியாலும், அவர்கள் துணையும் செல்வமும் செல்வாக்கும் கொண்டு நாட்டின் மூலை முடுக்குகளிளெல்லாம் நடந்த இடைவிடாத பிரசாரத்திலும் திராவிட சமுதாயத்தின் வீழ்ச்சித் தொடங்கிவிட்டது. அதுவரை உலகத்தின் எதிர்பாராத நிகழ்ச்சிகளெல்லாம் இயற்கையின் நியதியால் நடக்கின்றதென்று சாதாரணமாக இருந்த மக்கள் இறைவனால்தான் இப்படி நடக்கிறது என்பதை ஒவ்வோர் நிகழ்ச்சியிலும வெகு சாமர்த்தியமாக ஆரியர்களால் நுழைக்கப்பட்ட காரணத்தாலும், அவைகளை அரசர்கள் முதல் அறிஞர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் வரை எல்லோராலும் கடைப்பிடிக்கவேண்டிய நிலை ஏற்பட்ட காரணத்தால் சாதாரண பாமர மக்கள் வேறுவழியில்லாமல், எதிர்த்துப் பேச தைரியமில்லாமல், பின்பற்றவேண்டிய நிலையை அடைந்துவிட்டார்கள். அன்றே திராவிட சமுதாயத்தின் வீழ்ச்சிக்கு படுகுழி வெட்டப்பட்டுவிட்டது. வட மொழி ஒரு பக்கம், வேள்விகளும், மோகம் ஒரு பக்கம், வேத பாராயணங்கள் ஒரு பக்கம். கண் மூடிக் கொண்டு ஜெபத்தில் இருப்பதைபோல், உருமீன் வருமளவும் வாடியிருக்கும் கொக்குகளைப் போல திராவிட சமுதாயம் என்ற மீன் தங்கள் வலையில் கிடைக்கும் வரையில் உறுமாறி புத்த சங்கத்திலும் ஒரு சாராரும், அரசன் அவைக் களத்தில் செல்வாக்கு பெற்ற சிலராகவும், வெளியே செல்வச் சீமான்களின் பக்கத்தில் சிலராகவும் திரும்பிய பக்கமெல்லாம், அவர்களாகவே,