பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



2

சரிந்த சாம்ராஜ்யங்கள்


யாமல் மக்களுடைய ஆவேசக்கனலால் கருகி சாம்பலான சாம்ராஜ்யங்கள்.

வேட்டுச் சத்தம் வெளியே கேட்டுக்கொண்டிருந்த போது மக்களைக் காட்டிக்கொடுத்து தானும் தன் குடும்பமும் சுரங்க வழியால் வெளியேறியதால் வேதனைக்குள்ளான சாம்ராஜ்யங்கள். வற்றிய அகழி, வான் பறவைகள் வட்டமிட்டப் பிணக்குழி, பொலிவிழந்த பவனம், நாயும் நரியும் நாவை நீட்டிக்கொண்டு பிணங்களின் மேல் திரியும் காட்சி, அரசியல் பங்கீட்டில் போட்டி, அதிகாரத்தைச் செலுத்துவதில் சுயநலம், மக்களையடக்க நானேதான் என்ற இருமாப்பு, மங்கையர்களை சிறைபிடித்ததால் ஏற்பட்ட முற்றுகை, "நீ அந்த மங்கையை விரும்பினால் மணிமுடியைத் தரமாட்டோம் என்றெழுந்த சம்பிரதாயத்தொனி, காலத்தால் ஞாலத்தைப் பார்க்காமல் கணக்கெடுக்கப்பட்ட ஆயுதங்களின் பட்டியலைக்கண்டு களம்புகுந்த அறியாமை, மண்ணுக்குடையவன் நான், ஆகவே மண்டலாதிபனும் நான் தான். மக்களே ! நீங்கள்தான் மண்ணிலும் கேடான வர்கள்" என்று ஏளனம் பேசியதால் அதே மக்களால் அதே மண்ணக் கெளவிய கேலிக்கூற்று. மணியுருட்டிகள், தீக்குண்டத்தார், தேவதூதர்கள் என்று தம்மைச் சொல்லிக்கொண்டோர், தர்ப்பையேந்திகள், ஆந்தை விழியார், ஆபாசச்சின்னங்கள் ஆகிய அனைவரும் சேர்ந்து மன்னர்களைத் தம் மந்திரங்களென்ற விளையாட்டுக் கூச்சலாலடக்கி மக்களின் மதியையும் நிதியையும் சூறையாடி, அவர்கள் விதியைத் தம்மால் மாற்றமுடியும் என்ற வெட்டி வேதாந்தம் பேசி, இதை நம்பிய மக்கள் பலவாண்டுகள் தங்கள் வாழ்வில் மாற்றங் காணாததால் செய்த புரட்சியால் புதையுண்டுப் போன சாம்ராஜ்யங்கள் ;