56
சரிந்த சாம்ராஜ்யங்கள்
கோட்டையில் அழுகுரல்கேட்கக் காண்கிறோம். மரணக் குழி வெட்டப்படுகிறது. மயானத்தில் அதன் கவஅடக்கம் அடுத்த நூற்றாண்டில் என்றாலும் ஆச்சரியமில்லை.
மதவெறியால் தோன்றி மதவெறியாலேயே மறைந்த சாம்ராஜ்யம்
இந்தியாவின் கதவை இஸ்லாமியர்கள் கி. பி. 725-ல் தட்டுகின்றனர். அந்த குரல், வந்தவனை வாழ வைத்த இந்தியர்களுக்கு எதிரியினுடையது என்று படவில்லை. எவனெவன் எந்தெந்த அக்ரமங்களைச் செய்தாலும் ஈசன் வெகுண்டதால் இந்த அழிவையுண்டாக்க இப்படி சிலரை அவதார புருஷர்களாக அனுப்புகிறான் என்றே எருமைபோலிருந்தனர். அரேபியப் படையெடுப்பில் தொடங்கி கஜினி கையாண்ட கபோதிக் கொள்கையும், முகம்மது கோரி சூறையாடியதலைகளும், அதன் பிறகு அந்த ஆணவமிக்கவர்கள் கோவேந்தர்களென பட்டம்பெற்று கொள்ளையும் கொலையுமே குலத் தொழிலாகக் கொண்ட அவர்களால் நியமிக்கப்பட்ட அடிமையரசர்கள் வடபாகத்தையாண்டதும், கில்ஜி வமிசத்தினரும் லோடி பரம்பரையினரும் கொஞ்சமும் கருணையில்லாமல் ஆண்டதும், மொகல் சாம்ராஜ்யம்தோன்றியதும், பாபர் உமாயூன் பரம்பரைப் பாத்தியத்தைக் கொண்டாடியதும், இடையிலே தோன்றி மறைந்த ஷேர்கான் ஆட்சியும், இந்துக்களை பகைத்து வாழ தைரியமில்லாமல் சமரசம் பேசி வாழ்ந்த அக்பர் ஆண்டதும், அதைத் தொடர்ந்தே ஜஹாங்கீர் ஷாஜ ஹான் பார் எங்கிலும் பிறைக்கொடி பறக்கவேண்டுமென்ற மதவெறியை அடக்குவதற்காக ஏற்பட்ட