உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

57


மகாராஷ்டிரத்தின் முற்றுகையை, வீரன் சிவாஜி ஏந்திய வாளை, ரஜபுதனரின் வீரத்தை எதிர்க்க முடியாமல் வீழ்ந்து விட்ட ஒளரங்கசீப்பின் இஸ்லாமிய பேராசையோடு மொகலாய சாம்ராஜ்யம் வீழ்ந்துவிட்டது. அதன் அடையாளங்களாக எஞ்சி நின்றவை, ஜும்மாமஸ்ஜித் தாஜ்மஹால், செங்கோட்டை, மைலாசனம்.

மூன்று நிலைகள்

அரேபிய படையெடுப்பில் இந்தியாவில் மூன்று சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. ஒன்று - புதியதோர் சாம்ராஜ்யம் ஏற்படுகிறது. இரண்டு - இந்துமத ஆதிக்கம் குறைந்துபோய் வேரோர் மத ஆதிக்கம் வளர்வது, மூன்று - இதன் காரணமாக ஒரு புதிய விழிப்புணர்ச்சி உண்டாகிறது. அல்லாவின் பெயருக்கு அகிலமெல்லாம் அடிபணிய வேண்டுமென்ற காரணத்தாலேயே ஒரு கையில் பிறைக் கொடியும், மற்றோர் கையில் வாளையும் எந்தி இந்தியாவின் இரும்புக் கதவுகளைத் தமது டார்ட்டாரி குதிரைகளின் காலால் தட்டித் தகர்த்தெறிந்தனர். மரணம் எய்துவதாயினும் மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று மரணப் போர் நடத்தியவர் கள்தான் மற்றவர் மதத்தை மண்ணென மதித்தனர். மதக் கேர்யில்களை மண்மேடாக்கினர், தங்கச் சிலைகளை சூரையாடினர், வாளால் மற்றவர்கள் வழிபாடுகளைத் தடுத்தனர். ' இது உங்கள் மதக்கோட்பாடுகளிலே ஒன்றா ' என்று கேட்கத் துணிவற்ற சில சோற்றுத் துருத்திகள் உண்மையான வீரர்களையும் கோழைகளாக்கி, அன்பு, அறம், அகிம்சையெனப் பேசி இந்திய ரத்தத்தைச் சிந்தச் செய்து இஸ்லாமிய ஆட்சியின் கல் நாட்டு விழா செய்தனர். அன்று தொடங்கி இந்திய