58
சரிந்த சாம்ராஜ்யங்கள்
வீரத்தின் பட்டயத்திலே எண்ண முடியாத சுருங்கள் கோடுகள் வீழ்ந்துவிட்டன.
காசீம்
கி. பி. 725-ல் முதன் முதலில் இந்தியாவை நோக்கி வந்தான் முகம்மத் பின் காசீம். 728-ல் குஜராத் நாட்டரசன் நாகபட்டன் என்பவனால் தோற்கடிக்கப்பட்டான். முழு தோல்வியடைந்து திரும்பி ஓடிய காசீமுக்குப்பிறகு 250 ஆண்டுகள் எந்த இஸ்லாமிய மன்னனும் இந்தியாவைத் திரும்பிப் பார்க்கவில்லை. ஒழிந்தது எதிர்ப்பு என்றிருந்தனர் இந்திய அரசர்கள். ஆனல் அரேபியாவில் இந்திய நாட்டின் எழிலைப்பற்றி நினைக்காத நாளில்லை. எப்படி அதை அடிமைப்படுத்துவது என்று பேசாதவர்களில்லை. காசீம் வேரூன்றிய நாள் தொடங்கி ஆட்சி நிலையாக வேரூன்றியிருந்தால் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியின் நாட் குறிப்பில் 250 ஆண்டுகள் கூடியிருக்கும். தோன்றி உதிர்ந்த நட்சத்திரம்போல் தோன்றி மறைந்தான் காசீம்.
கஜினி
முகமத் கஜினி. அண்ட சராசரங்களையாண்டதாகச் சொல்லும் சோமநாதர் சிலையை துண்ட துண்டமாக்கியவன் இவன்தான். சிலை வணக்கத்தின் வைரி, படை திரட்டி வந்த பகற் கொள்ளைக்காரன். பதினேழு முறை படையெடுத்து கூர்ஜரத்திலுள்ள சோமேசர் ஆலயத்தையும், தானேஸ்வர், கன்னோஜ், மித்ரா என்ற அழகு நகரங்களை அழித்தவன். இவனது கொடுஞ் செயலை வர்ணித்திருக்கிற உட்பி என்ற சரித்திர ஆசிரியன் எழுது