சி. பி. சிற்றரசு
59
கோல் நடுங்கி நடுங்கிச் சென்றிருக்கின்றது. அவ்வளவு. அழுதுதீர்த்திருக்கினறான் அந்த நிகழ்ச்சியின் சிற்பிகாலக் கோர்வையின் கலைஞன் உட்பி. மித்ராவில் ஆயிரம் அழகான கல் வீடுகள். அந்த அழகு மாளிகைகளுக்கு அழகு செய்வதுபோல் இடையே ஒரு அழகான கோயில், அவைகளையழிக்க ஒரு சாதாரண மிருகத்துக்குக்கூட மனம் வராது. அந்த எழில் நகரைத்தான் படைகளால் தரைமட்டமாக்கிவிட்டான் தறுக்கன் கஜினி, எத்தனையோ கோடிகள் செலவிட்டு இருநூறு ஆண்டுகள் கட்டினாலும் மீண்டும் அதே நிலையில் காண முடியாத நகரத்தைத்தான் இந்தக் கொடியவன் நாசம் செய்தான் என்ற பேராசிரியன் உட்பியின் சொற்களே கஜினியின் கொடுஞ் செயலை விளக்கப் போதுமானது.
இவனுக்கு ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவவேண்டுமென்ற ஆசையைவிட கொள்ளையடித்து சேர்த்த பொருள்களை அரேபியாவுக்குக் கொண்டுசெல்லவேண்டு மென்ற எண்ணந்தான் அதிகம். எனினும் இவன்தான் இங்கே இஸ்லாமிய அரசு நிரந்தரமாக நிலைபெற வழி, வகுத்துத் தந்தவனும் அதற்குக் காரணமானவனுமாவான்
ஆசை
தான் ஆர்யவர்த்தத்தில் கொள்ளையடித்துக் கொண்டுபோன செல்வத்தை எல்லாம் ஓர் நாள் தன் எதிரிலே குவிக்கச் செய்து தான் பார்த்து மகிழ்ந்ததுமன்னியில் தன் தளகர்த்தர்களையும் பார்த்து மகிழச் செய்தான் கஜனி. அந்தச் செல்வக் குவியலின் உயரமும் அதிலே மின்னிய வைரங்களின் ஒளியும் பார்த்தவர்