உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

61


இன்றந்த சோமநாதபுரத்தில் இடிந்து சரிந்திருக்கும் கோயில்களுக்கும் கொத்தளங்களின் சுவர்களுக்கும் உயிர் வந்தால் கஜனியின் சந்ததியையே அழித்தொழிக்கும். பிற நீண்டகாலம் வரை எந்த அரேபிய மன்னனுடைய தொல்லையும் இங்கே தலை நிட்டவில்லை.

கோரி

கண்ணோஜ்ஜியில் பிரிதிவிக்கும் ஜெயச்சந்திரனுக்கும் ஏற்பட்ட தகராரின் காரணமாக முகம்மது கோரி உள்ளே நுழைகிறான். பிரிதிவியை பழிதீர்க்கவேண்டுமென்று ஜெயச்சந்திரன்தான் கோரியை அழைத்து வருகின்றன். ஆனால் கோரி, பிரிதிவியிடம் எதிர்த்து நிற்க முடியாமல் உயிருக்குத் தப்பி ஓடுகிறான். தான் ஜெயித்த நாடுகளைத் தன் அடிமைகளிடம் ஒப்படைத்து அவர்களை ஆளும்படிச் செய்துவிட்டு ஒடுகிறான். அந்த அடிமை அரசர்களும் மாபாதகன் ஜெயச்சந்திரன் உதவியினால்தான் ஆள்கிறார்கள். இப்படி விட்டுவிட்டு ஓடிப்போன மொகலாய மன்னர்களில் கோரியின் ஆட்சியையும் அவனுக்குப் பின்பும் நிலைக்கச் செய்தவன் ஜெயச்சந்திரன்தான். வெள்ளையர் ஆட்சியை இங்கே நிலைநிறுத்தத் துரோகி உமீசந்த் என்ற ஆரியன் காரணமானதைப்போல் முஸ்லீம் சாம்ராஜ்யம் இங்கே வேரூன்ற ஜெயச்சந்திரன் காரணமானான்.

அடிமை அரசர்கள்

கோரி விட்டுச்சென்ற அடிமை அரசர்கள். இவர்களிடந்தான் தான் கண்ட நாடுகளின் ஆட்சியை ஒப்