உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

சரிந்த சாம்ராஜ்யங்கள்


படைக்கின்றன். ஒன்றுக்கும் உதவாதக் தன் அடிமைகளை இந்திய மக்களுக்கு மன்னர்களாக்கினான் என்றால் இந்திய மக்களையும் மன்னர்களையும் அவன் எவ்வாறு கருதியிருக்கவேண்டும். அந்த அடிமை அரசர்களிலே, முதல் அரசன் குதுப்தீன், மாற்றான் மண்ணிலே முகம்மதியர்கள் ஏற்படுத்திய அரசின் துவக்கத்தை உலகெங்கும் எடுத்துக் கூறுவதுபோல் இன்னும் டில்லியின் அருகே குதுப்புத்தீன் பெயரால் எழுப்பிய குதுப்மினார் எனும் கோபுரம் காட்சியளிக்கிறது. இப்படித் துவங்கிய இஸ்லாமிய அரசு, அடிமை வம்சம் என்ற பெயரில் ஆரம்பமாகி, கில்ஜி வம்சம், துக்ளக் வம்சம், லோடி வம்சம், மொகல் வம்சம் என்ற பெயர்களில் மறைந்து உருவாகி ஒளரங்கசீப்பின் கடைசி நாளோடு உருக்குலைந்து போயிற்று.

அல்லாவுத்தீன் கில்ஜி

அல்லாவுத்தின் கில்ஜி. இவன்தான் ஜெஸியா வரியையும் யாத்ரீக வரியையும் போட்டவன். இடத்தையும் பிடித்து மதப் பெருமையையும் சொல்லி, பொருளையும் குறையாடி, சிங்காதனத்தையும் சொந்த்மாக்கிக் கொண்டு, மெதுவாக மேற்சொன்ன இரண்டு வரிகளையும் போட ஆரம்பித்தான். இந்த வரிகளையும் இவனையும் பலமாக எதிர்த்து முறியடித்தவன் தம்பாரையாண்ட ரஜபுத்திர அரசன் ராணா. இன்னும் தெற்கே என்னென்ன இருக்கின்றதென்று தெரிந்துகொள்ள தனது தளகர்த்தன் மாலிகாபூரைவிட்டுப் பார்த்தவனும் இந்த கில்ஜிதான். இவனோடு முடிவடைகிறது கில்ஜியின் சாம்ராஜ்யம்.