64
சரிந்த சாம்ராஜ்யங்கள்
தவிர மற்ற அரசர்கள் அனைவருமே அடங்கிவிட வேண்டியதான உபாயத்தைக் கையாண்டவன் இவன். ரஜபுதன மாதரின் தியாகம். இந்து சிப்பாய்கள் ஜனானாவில் சிந்திய ரத்தம், கொலை செய்யப்பட்ட சிந்து பனியாவின் தலை, ஆகியவற்றால் எழுந்த எதிர்ப்பை தந்திரமாக அடக்கிவிட்டான். அதற்காக அக்பர் கையாண்ட முறை மிகவும் விசித்திரமானவை. இதுவரை வந்து போன இஸ்லாமிய அரசர்கள் எண்ணத்தில் தோன்றாதது. பாபர் நினைத்து நினைத்து கைகூடுமோ கலகம் வருமோ என்ற கலக்கத்தால் கைவிட்டு விட்ட முறை. தந்தை உமாயூன் கையாளாத முறை. இந்து அரசர்கனை எதிர்த்து நின்ற முஸ்லிம் மன்னர்களடைந்த நாசத்தை மனப்பாடம் செய்து வைத்தவனும், அதற்கு முற்றிலும் மாறானதோர் மார்க்கத்தை வகுத்தவனும் இவன்தான்.
இந்துக்களோடு சேர்ந்து வாழ்வது என்ற முடிவோடு, தன் முன்னேர்களிலே ஒருவனான அலாவுத்தின் கில்ஜி இந்துக்களுக்குப் போட்டிருந்த ஜெஸியா வரியையும் யாத்திரை வரியையும் நீக்கிவிட்டான். இந்துக்களுக்குத் தன்மேல் அதிக நம்பிக்கை வரவேண்டுமே என்ற காரணத்தால் அசல் குர்ஆனையே நிராகரித்து ஒரு புதிய தீனேஹிலாயி என்ற ஒரு போட்டி குர்-ஆனை அப்துல் பாசில் என்பவரின் துணைகொண்டு எழுதச் செய்தவனும் இந்த அக்பர்தான். இந்து இதிகாசங்களான இராமாயணத்தையும் பாரதத்தையும் பெர்ஷிய மொழியிலே மொழி பெயர்க்கச் செய்து இந்துமத வாதிகளின் முழு நம்பிக்கையையும் பூரண அபிமானத்தையும் பெற்றுக் கொண்டான். ரஜபுத்திர வம்சத்தின் ரத்த பாசத்தை