உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

65


வளர்க்க வேண்டுமென்ற எண்ணத்தால் ரஜபுதன அரசன் அம்பர் என்பவன் மகளைத் திருமணம் செய்து கொண்டான். அவள் தம்பி மான்சிங் என்பவனுக்கு மந்திரிப் பதவியளித்தான். அங்கே இருந்த மற்றோர் அரசன் தோடர்மால் என்பவனுக்கு பொருளாதார மந்திரிப் பதவியையளித்தான். பீர்பால் என்பவனுக்கு மற்றோர் வேட்டையைக் காட்டினான், இவன் கையாண்ட இந்த முறைகளால் இந்துஸ்தானம் இஸ்லாமின் அடிமையாய்விட்டது. எதிர்ப்பு அடங்கிவிட்டது, இந்தியாவை ஒன்றாக்குவது, இந்துக்களுக்குள் ஒற்றுமையுண்டாக்குவது, அரசியல் அந்தஸ்தை உயர்த்து வது ஆகிய இவைகளே இவனுடைய குறிக்கோள் களெனக் காட்டினான்.

ஆனால் இவனுடைய இந்த உயர்வான அந்தஸ்துக்குக் காரணமான பைராம்கான் விரட்டப்பட்டான். அக்பரின் சாம்ராஜ்யத்தை பல எதிர்ப்புகளிடையே நிலை நாட்டிய பைராம்கான், அக்பரின் சிறிய வயதிலேயே அவனைத் தக்காரு மிக்காருமில்லாதவனென்று தரணியோர் புகழ அரும்பாடுபட்ட பைராம்கான் சில சுயநலமிகள் வைத்த கலகத்தால் வெளியேற்றப்பட்டான். சமரசம் பேசிய அக்பர், தான் சன்மானிக்க வேண்டிய பைராம்கான சரகென ஊதித் தள்ளினான், ரணகளத்தில் ரஜபுத்திரர்களின் தலைகள் உருண்டபோது பார்த்து அலறிய சிறுவன் அக்பருக்கு அருகிருந்து ஆறுதல் கூறி, யுத்த தருமத்தை எடுத்துரைத்து. டெல்லி அரியாசனத்திலே அக்பரை ஏற்றிவைத்து கண் குளிரக் கண்டு அதுவே தான் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் பரிகார மென பரவசமடைந்த பைராம்கான் சில பாதகர்கள் செய்த சதியால் நாடுகடத்தப்பட்டான். அக்பரின்