பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

சரிந்த சாம்ராஜ்யங்கள்


உய்வுக்காக அல்லும் பகலும் அரும்பாடுபட்டு அவனுடைய பிறைக் கொடியின் நிழல்படாத இடமே பாரில் இருக்கக் கூடாதென்று தியாகம் செய்க வீரத் தியாகி பைராம்கான் சில வீணர்கள் கக்கிய விஷச் சொற்களால் ஏமாற்றப்பட்ட வேந்தனின் வெகுளிக்கு ஆளாய் வெளியேறிவிட்டான். அரசனுக்கு உழைத்தது போதும் இனி ஆண்டவனுக்காகிலும் உழைப்போம் என மெக்கா நோக்கி சுடு மணலில் செல்கின்றான். வழியிலே சிலச் சதிகாரர்களால் கொல்லப்படுகிறான். நன்றிகெட்ட உலகத்தில் நடமாடுவதைவிட இறப்பதே மேலென அந்த இஸ்லாத்தின் புனித மண் என்று சொல்லப்படுகிற மெக்கா மண்ணில் தனது குறுதியைக் கொட்டிக் கண்களை மூடிவிட்டான். அக்பர் யார் யாருக்கோ எதை எதையோ செய்திருப்பான். ஆனால் அவன் பைராம்கானிடம் நடந்துகொண்ட முறை மிக மிக நன்றி கெட்டது என்றே சரிதம் பேசுகிறது.

ஷாஜஹான்- ஜகாங்கீர்

அக்பருக்குப் பிறகு வந்த ஷாஜஹானும் ஜகாங்கிரும் அக்பரை அறைகுறையாகப் பின்பற்றினார்கள். ஷாஜஹான் காலத்தில் கட்டப்பட்டவைதான் டெல்லியிலிருக்கும் செங்கோட்டை, ஜும்மா மஜீத், தாஜ்மகால், கோஹிதூர், கோஹினுர் என்ற இரண்டு விலையுயர்ந்த கற்களைக் கண்களாக வைத்து செய்யப்பட்ட மைலாசனம். ஆனால் இவர்களும் இந்து கோயில்களை உடைக்கத் தவரவில்லை, ஷாஜஹானின் நான்கு மக்களிலே ஒருவரான ஒளரங்கசீப் தக்காணத்தில் கவர்னராக நியமிக்கப்பட்டான். இவர்கள், இந்தியாவில் ஆட்சியை நிறுவுவதைவிட மதத்தை எப்படியாகிலும்