உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

67


நுழைத்துவிட வேண்டும் என்ற காரணத்தால்தான் இந்துமதச் சின்னங்களை அழிப்பதன் மூலம் இந்து மதம் அழிந்துவிடக் கூடும் என எண்ணினார்கள்.

ஒளரங்கசீப்

தக்காணத்தில் இவன் கவர்னராக இருந்தபோதே சிவாஜி தன் வேலயை இவனிடம் காட்டிவைத்தான். இந்து ராஜ்யத்தை முறியடித்து முஸ்லிம் மதத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற மண்டைக்கணம் ஏறிய மன்னன் ஒளரங்கசீப். தந்தையை சிறையில் வைத்து தன் மூன்று தம்பிமார்களை சூழ்ச்சியால் கொலை செய்து பட்டம் சூட்டிக்கொண்டவன் இவன்தான். அக்பரால் நீக்கப்பட்ட ஜெஸியா வரியையும் யாத்ரீக வரியையும் மீண்டும் கட்டித்தீரவேண்டுமென்று வற்புறுத்தினான். இதனால் ரஜபுதன களத்தில் ஏற்பட்ட எதிர்ப்பை அடக்க எவ்வளவு முயன்றும் இவனால் அது முடியவில்லை. சீக்கியர்கள் எதிர்ப்பை சமாளிக்க முடியவில்லை. சிவாஜியைத் தலைவனாகக் கொண்ட மராட்டிய வீரர்களை முறியடிக்க முடியவில்லை. குமுறி எழுந்த கோபத்தால் சீக்கிய மத குருவை கொலை செய்தவனும் இவன்தான். நெருப்பை வைக்கோல் போர் மூடிக்கொண்டிருக் கின்றது என்பதைப் போல் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிர்ப்பு கிளம்பிவிட்டது. மார்வார் சுதந்திர யுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டுவிட்டது. மேவார் ராணாவின் தலைமையில் எல்லா ரஜபுத்திர வீரர்களும் கடலெனத் திரண்டனர்.

மகாராஜா ஜஸ்வந்த் சிங்கு தலைமையில் புறப்பட்ட படை வெற்றிகரமாகத் தன் எதிர்ப்பைக் காட்டியது. எங்கும் தன்மேல் கிளம்பிய ஆத்திரத்தைக் கண்ட