68
சரிந்த சாம்ராஜ்யங்கள்
ஒளரங்கசீப் அல்லாவால் கைவிடப்பட்டோமோ என்ற கோபத்தால் பல கோயில்களை இவனும் தன் பங்குக் கேற்ற வண்ணம் அழித்தான். இறுதியில் ஒளரங்கசீப்பின் ஜெனரல் ஜெயசிங்க் என்பவனால் 1664-ல் சிவாஜி, அரசன் ஒளரங்கசீப்பின் அவைக்களம் கொண்டுவரப் படுகிறான். எனினும் சிவாஜி தந்திரமாகத் தப்பித்துக் கொள்கிறான். தப்பியோடிய சிவாஜி தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அல்ல. இந்திய மானத்தைக் காப்பாற்றி வீரத்துக்கு என்றும் சாகாவரமளிக்கச் சென்றான். அந்த வேகத்தில்தான் தேர்னாபுரந்தர், ராஜகிரி, கல்யாண், என்ற மகத்தான கற்கோட்டைகளைத் தகர்த்தெரிந்த மராட்டியகுல திலகம் சிவாஜி. மொகலாய மன்னர்களின் சிங்கக் கனவாகத் திகழ்ந்தான். மகாராஷ்டிரத்தின் கெளரவ வீரத்தை குன்றின் மேலிட்ட விளக்கென ஏற்றிவைத்த வீரன். வேந்தன் என்றால் வீரன். கோழையுள்ளம் படைத்து குவலயத்தையாளத் திட்டமிடும் குறைமதியோனல்ல என்பதை வட இந்திய வரலாற்றிலேயே வாள் முனையால் எழுதிக் காட்டிய வீரன் சிவாஜி.
மங்கோலிய சாம்ராஜ்யத்தை நிறுவிய செங்கிஸ்கான் கால முதல் இப்பாரில் எம்மை அசைப்போர் யாருமில்லை என்று எக்காளமிட்ட இஸ்லாத்தின் முன்னே, குதிரை விரன் சிவாஜி தோன்றினான். பானிப்பட்டில் இஸ்லாமிய வீரன் பாபர் பீரங்கியின் முன் நின்று வாழ்க இஸ்லாம்" என்று முழக்கமிட்டானே அந்த முழக்கத்திற்கு ஒரு எதிர் முழக்கம், விந்தியத்துக்கு வடக்கே இந்து கோவில் களையெல்லாம் உடைத்து இடிந்துபோன அக்கோவில்களின் கற்களைக்கொண்டு மசூதிகள் எழும்பியபோது முகலாயப் படை எழுப்பிய முழக்கத்திற்கு எதிரே, மறு