72
சரிந்த சாம்ராஜ்யங்கள்
நேற்று மாலை தரையில் உருண்டோடி விட்டது. மன்னர்பிரானே இனி நம்மை அசைப்போர் இந்திய மண்ணில் யாருமே கிடையாது" என்று சொல்லிய ஒளரங்கசீப்பின் மந்திரிகள், ”மகாப்பிரபோ, நான் என் சொல்வேன். அமிர்தசரஸில் சீக்கியர்கள் கூடி நமது படையை அழிக்க சபதம் செய்கிறார்களாம். குருதேவர் மரணத்திற்குப் பழி வாங்க போகிறார்களாம்” நாம் உடனே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் இல்லையேல், அவர்கள் தொல்லை அடக்க முடியாதபடி வளரலாம்.
ராஜபுதனம் சென்ற நமது படை திரும்பிவிட்டது. பாலைவனத்தைக் கடந்து சென்ற நமது வீரர்கள் இந்துக்களின் எதிர்ப்பைக் கண்டதும் ஓடி வந்து விட்டனர். வேறுபடையை அனுப்பட்டுமா ? என்ன செய்ய வேண்டுமென்று மன்னர் தான் சொல்ல வேண்டும்.
சிவாஜி டில்லி மீது படையெடுக்கப் போகிறானாம், பாதுஷாவுக்கு இதை சொல்ல வேண்டுமென்று ஒற்றர்களிடமிருந்து செய்தி வந்திருக்கிறது."
இப்படிச் சொன்னார்கள் மந்திரிகள்.
தன் மந்திரிகள் ஊதிய அபாயச் சங்கைக் கேட்டு திகைத்துப் போனான் ஒளரங்கசீப். என்ன செய்வது என்று யோசிப்பவன்போல் தன் எதிரே அமர்ந்திருந்தோரை நோக்கினன். இந்துக்கள் எவரும் காணப்படவில்லை. அரேபிய நாட்டு ராஜ தர்பார்போல் காட்சி யளித்த, தனது சபையின் தோற்றம் ஒளரங்கசீபின் எஃகு உள்ளத்தில் அவநம்பிக்கையை உண்டாக்கியது. அக்பர் கால முதல் இந்துக்களுக்கு அளிக்கப்பட்ட