உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

சரிந்த சாம்ராஜ்யங்கள்


ஆனந்தம் இல்லை, குடி மக்களின் புன்னகை தான் எனக்கு வாழ்வென்றான் அசோகன், சாணக்கியன் எழுதித்தந்த அர்த்த சாஸ்திரத்தை காலை முதல் மாலை வரையில் தன் அருகே வைத்துக் கொண்டு ஆட்சி செய்தான் அசோகன். ஆனால் அவனது ஆட்சி ஏன் அவன் காலத்துடனே அழிந்து போய் விட்டது என்று இன்றும் நாளையும், சரித்திரப் புலவர்கள் உலகைப் பார்த்து கேட்ட வண்ணமிருக்கின்றனர்.

அஸ்வமேத யாகம் செய்தான். அஸ்வமேதக் குதிரையின் குளம்பொலியைக் கேட்டு ஆர்ப்பரித்தான். மூவேந்தர்களை முறியடிப்பேன் என்று முழங்கினான். இராமேஸ்வரம் வரையில் தன் படைகளை அனுப்பினான். இந்தியாவை என் படை வலம் வந்துவிட்டது என்று எக்காளமிட்டான் சந்திரகுப்தன். அவன் தோற்று வித்த சாம்ராஜ்யத்தை அழித்தது யார்? மதவெறியா? மாற்றானின் படையெடுப்பா? என்று சரித்திர ஏடுகள் நம்மைப் பார்த்து இன்றைக்கும் கேட்டவண்ணமிருக்கின்றன.

கணவாய் வழியே உள்ளே நுழைந்தார்கள். காலாட் படை, தேற்சி பெற்ற குதிரைப்பட்டாளம், போர் களத்திலே பயிற்சி பெற்ற படைவீரர்கள். அனைத்தும் இஸ்லாமிய மன்னர்களிடையே இருந்தன. போரிலே வெற்றி பெற்றார்கள். புனிதவான்கள் என்று தங்களைத் தாங்களே பிரகடனப்படுத்தினார்கள். புதிய கொள்கை ஒன்றை நிலை நாட்டினார்கள். செல்வத்தைச் சேமித்தார்கள். சில நேரங்களில் நல்ல ஆட்சியை ஏற்படுத்தினார்கள். ராஜபுத்திரனின் அன்பையும், அவன் வாள்