பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

sia zwouš BËzsosistä: மனத்திலுள்ள தீமையை அகற்றிச் சிறு குழந்தைகளாக ஆகாவிட்டால் நீங்கள் கடவுள் இராச்சியத்தில் பிரவே சிக்கமாட்டீர்கள். கி பிரபுவே பிரபுவே என்று என்னைப் போற்றுவோர் எலலாம் கடவுள் இராச்சியத்தில் புகுவதில்லை. என் தந்தையின் ஆணைப்படி நடப்பவரே புகுவர். கி

பக்தி செல்வமிருந்தும், வருந்துவோர்க்குக் கருணை காட் டாதவனிடம் கடவுள் பக்தி இருப்பதாகக் கூறுவது எங்ங்னம்? கி

கடவுளிடம் பக்தி செய்பவர்க்கு எல்லாம் நன்மை யாகவே இருக்கும். தி அறத்துடன் கூடாத பக்தி பக்தியாகாது. உலக ஆசை உள்ளவரையில் உத்தமனிடம் பக்தி உண்டாக மாட்டாது.

LjEBD56UDLD

பகைமையை விட்டவரே உலகத்தில் இன்பம் துய்ப்பவர். பெள இவன் ஏசினான், அடித்தான்் என்ற எண்ணங்களை நினையாதவர்கள் பகைமை உணர்ச்சியினின்றும் நீங்கி விடுவார். பெள பகைமை ஒருநாளும் பகைமையால் போவதில்லை, பகைமையின்மையாலேயே போகும், இதுதான்் ஆறம் கூறும் நெறி. பெள

எவன் பொங்கி எழும் வெகுளியை அடக்குகிறானோ அவன் மனத்தின் சாரதி, மற்றவர் எல்லோரும் கயற்றை மட்டும் பிடித்திருப்பவர். பெள