பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 105

மெய்ம்மையாம் உழவைச் செய்து

விருப்பெனும் வித்தை வித்திப் பொய்மையாம் களையை வாங்கிப்

பொறையெனும் நீரைப் பாய்ச்சித் தம்மையும் நோக்கிக் கண்டு

தகவெனும் வேலி யிட்டுச் செம்மையுள் நிற்ப ராகில்

சிவகதி விளையு மன்றே. -திருநாவுக்கரசு

பெண் * கடவுள் ஆணுக்குவிடப் பெண்ணுக்கே அதிக அறிவை அளித்துள்ளன். 6T * காம இச்சையுடன் பெண்ணின் கணுக்காலைப் பார்த்தாலும் சோரம் செய்தவனே யாவான். G了 * பெண்ணை அழும்படி செய்யாதே, ஆண்டவன் அவள் கண்ணிரை அளந்து பார்ப்பான். 6.Τ

பெருமை * பெருமை விரும்புவோர் யார் யார்க்கும் தாழ்ச்சி சொலல் வேண்டும். - தா * பெரியோர் பெரியோராகக் காட்டிக்கொள்வதில்லை, அதனால் பெருமை பெறுகின்றார். தா

பெற்றோர் * பெற்றோரைப் பேணுவதே அறத்தின் வேர், அந்த மரத்தினின்றே அனைத்தறமும் கிளைவிட்டு வளரு கின்றன. &

பேறு * பிறர்க்கு உதவுவதே பெரும் பேறு; பெரியோருடன் நட்புக் கொள்வதே பெரும் பேறு; துன்பம் வரினும் சோர்ந்துவிடாதிருப்பதே பெரும் பேறு. பெள