பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

சர்வ சமயச் சிந்தனைகள் கடவுளும் உங்கள் கடவுளும் ஒருவரே, அவருக்கே நாங்கள் பணிந்துளோம். இ

முசுலிம்களோ மற்றவர்களோ யாராயினும் கடவுளை நம்பி அறநெறியில நின்றால அவர்ககு ஆண்டவன் அருள்வார். அவர்கள் அஞ்சவேண்டியதுமில்லை, வருந்த வேண்டியதுமில்லை. இ

மரணம்

உடம்பே, தான்் என்று உணர்பவன் மரணத்துக்கு அஞ்சுவான். ஆன்மாவே, தான்் என்று உணர்பவன் மரணத்துக்கு அஞ்சமாட்டான். &F

மதம் ஆன சமயம் அது.இது நன்றெனும் மாய மனிதர் மயக்க மதுவொழி கானங் கடந்த கடவுளை நாடுமின் ஊனங் கடந்த உருவது வாமே - திருமூலர்

வேறுபடும் சமயமெலாம் புகுந்து பார்க்கின்

விளங்குபரம் பொருளே! நின் விளையாட்டல்லால் மாறுபடுங் கருத்தில்லை முடிவில் மோன

வாரிதியில் நதித்திரள்போல் வயங்கிற் றம்மா! சைவமுத லாமளவில் சமயமும் வகுத்துமேற் சமயங் கடந்த மோன சமரசம் வகுத் தநீ யுன்னையான் அணுகவுந் தண்ணருள் வகுக்க விலையோ!

பொய்வளரும் நெஞ்சினர்கள் காணாத காட்சியே பொய்யிலா மெய்யறிவிற் போதபரி பூரண அகண்டிதா காரமாய்ப் போக்குவர வற்ற பொருளே.

- தாயுமானவர்