பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

சர்வ சமயச் சிந்தனைகள்

அதன் முறை, அங்ங்ணமிருக்க பல கொள்கைகளும்

பல மதங்களும் எதற்காக? - ஜா பிற மதத்தான்ாயினும் நெறி பிறழாதவ னாயின் அவனும் ஆண்டவன் அடியவனே. - 6Τ

மதம் இன்றேல் உண்மையான அற வொழுக்கம் இல்லை; அற வொழுக்கம் இன்றேல் உண்மையான மதமில்லை. 6T

மதநம்பிக்கை இருந்தும் அறச் செயல்கள் செய்யா

விடில் யாது பயன்? மத நம்பிக்கை காப்பாற்றுமோ? அறச்செயல்கள் இல்லாத மத நம்பிக்கை மரணத் தையே தரும் கி

கடவுள் ஏற்கும் தூய மதம் துன்புறுவோர்க்கு உதவு வதும், உலக ஆசைகளில் ஈடுபடாதிருப்பது மாகும்.

கி

மத விடயத்தில் கட்டாயப் படுத்துதல் என்பது கூடாது. - இ

அல்லாவிடம் சரண்புகுந்து அறநெறி நிற்பவுனைவிடச் சிறந்த மதம் உடையவன் எவன்? இ

பிற மதத்தாரிடம் 'நான் வணங்குவதை நீர் வணங்க மாட்டீர், நீர் வணங்குவதை நான் வணங்க மாட்டேன், உம்முடைய மதம் உமக்கு, என்னுடைய மதம் எனக்கு' என்று கூறுக.

உள்ளன்புடனும் நம்பிக்கையுடனும் வணங்கு: பிரார்த்தனை செய்; கடவுள் கூறிய தான்த்தைக் கொடு, இதுவே உண்மையான மதம்.

மதம் என்பது தண்டு கமண்டலம் அல்ல, நீறு

பூசுவதுமன்று, மழிப்பதும் நீட்டுவதுமல்ல, மனத்தில் மாசில்லாமலிருப்பதே மதம். சி