பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

sia sudutë stëzscasti:

மனத்தைக் தூய்மை செய்யும் வழி ஆசைகளைக் குறைத்துக் கொள்வதே. - &S

அசையாத மனத்துக்கு அகில உலகும் அடிபணியும்.

தீமை செய்தவன் கழிவிரக்கம் கொண்டு தீமை செய் வதை விட்டு நன்மை செய்ய முல்வானாகில் அவனே கேட்டை நலமாகச் செய்யும் தந்திரம் அறிந்தவன். தா

மனத்தகத்தே புத்தருக்கு இடம் தந்தால் புத்தராக ஆகிவிடுவோம், பாம்புக்கு இடம் கொடுத்தால் பாம் பாக ஆகிவிடுவோம். கி

மனத்தில் களங்கம் இல்லையெனில் துன்பம் என்பதை அறியோம். அப்போது அனைத்திலும் இன்பம் காண் போம். - சி

தீய எண்ணம் என்னும் விருந்தாளிக்கு இடம் தந்தால் அது வீட்டின் அதிகாரி ஆகிவிடும். எr

- மனிதன்

அப்பா! உனக்கு இந்த வேதப்பொருளைக் கூறு கிறேன். மனித குலத்தினும் உயர்ந்தது எதுவுமில்லை. எவனும் தன்னை இழிவாக எண்ணுதலாகாது. தன்னை

இழிவாக எண்ணுபவன் வெற்றி காணமாட்டான். - o - மகாபாரதம்

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட் பண்பில்லாதவர்.

உறுப்பொத்தல் மக்களொப் பன்றால், வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.

- வள்ளுவர்