பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 113

மனிதர் அனைவரும் சகோதரரே, எல்லோரும் இறை வன் அருள் பெறுவர். பிறர் துன்பம் என் துன்பம், பிறர் நன்மை என் நன்மை. சி

உலக முழுவதிலும் அன்னியர் என்பவர் யாருமிலர், மனிதன் எதைச் செய்கிறானோ அதுவாக ஆகிறான். சி

கையால் வேலை செய்து பிழைப்பவன் கடவுள் நெறியில் நிற்பவன். 6了

ஒவ்வொரு மனிதனும் உலக முழுவதற்கும் சமான மானவனே. 6T

உலகத்திலுள்ள மக்கள் அனைவரையும் ஒரே ரத்த பந்த முடையவராகவே கடவுள் படைத்திருக்கிறார்.

மனிதர் கடவுள் போலவே ஆக்கப்பட்டுளர். கி

ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுள் ஒரு தேவ தூதனை யும் சாத்தான்ையும் நியமித்திருக்கிறார். கி

நாம் கடவுள் உடைமை, கடவுளிடமே திரும்பிச்

செல்வோம். கி

நான் நல்லவன் அல்லேன், யாரும் கெட்டவராக இருக்கக் காணேன். கி

மனிதனே! உன்னுடைய நலத்தை நீ விரும்பினால், அறம் செய்க, ஆணவத்தை நீக்குக. கி

கடவுள் ஒளி ஒவ்வொரு மனிதருடைய இதயத்திலும் இருப்பதால் மனிதர் எல்லோரையும் சமமாகவே

பாராட்டு. இ

மரணம் என்பது மலையினும் பெரிது, மயிரினும் சிறிது.