பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 14

১৫

சர்வ சமயச் சிந்தனைகள்

மறம் வண்டியின் சக்கரம் வண்டியுடன் இருக்கும் காலையில் பின்தொடர்ந்து போவதுபோல், துன்பமானது மனம் மொழி மெய் மூன்றினும் தீமையுடையவன் பின்னால் தொடர்ந்து செல்லும். பெள

மனிதன் நடக்கும்போது அவனுடைய நிழல் அவனை விடாமற் செல்லுவதுபோல, இன்பமானது மனம், மொழி, மெய் மூன்றினும் நன்மையுடையவன் பின் னால் தொடர்ந்து செல்லும். பெள

முத்தி எவன் ஐம்பொறிகளை அடக்கி ஆள்கின்றானோ,

எவன் அவா, வெகுளி, அச்சம், மூன்றையும் அறவே விலக்குகின்றானோ, அவனே சித்தி பெறுபவன்.

பகவான் கூறுகிறார் :- என்னிடத்திலேயே சரண் புகு வாய், எல்லாப் பாவங்களினின்றும் உன்னை விடுவிப் பேன். துக்கப்படாதே.

காமம், சினம், அவா மூன்றுமே நரகத்தின் வாயில்கள், அவையே ஆன்மாவை அழிப்பன, இருள் நிறைந்த இந்த வாயில்களிடம் செல்லாதவனே எப்பொழுதும் பரகதி அடைவான். பகவத்கீதை

காமம், வெகுளி, மயக்கம் மூன்றை அறவே ஒழித்தவர் கட்குத் துன்பம் கிடையாது. முத்தி பெறுவர். பெள

மெய் வாய் கண் மூக்குச் செவி எனப் பேர்பெற்ற ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்க் கலங்காமல் காத்துய்க்கும் ஆற்றல் உடையான் விலங்காது வீடு பெறும்.

ச - நாலடியார்