பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 சர்வ சமயச் சிந்தனைகள்

தூண்டா விளக்கின் சுடரனையாய்

தொண்டனேற்கும் உண்டாங்கொல்

வேண்டா தொன்றும் வேண்டாது

மிக்க அன்பே மேவுதலே. - மாணிக்கவாசகர்

  • மனமெனும் தோணி பற்றி

மதியெனும் கோலை யூன்றிச்

சினமெனும் சரக்கை ஏற்றிச் செறிகடல் ஒடும் போது

மதமெனும் பாறை தாக்கி

மறியும்போதறிய வொண்ணாது

உனையுனும் உணர்வை நல்காய்

ஒற்றியூர் உடைய கோவே. -திருநாவுக்கரசர்

  • எவ்வுயிரும் என்னுயிர்பேல் எண்ணி இரங்கவும்நின்

தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே.

தாயுமானவர் அன்பர்பணி செய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தான்ே வந்தெய்தும் பராபரமே. - தாயுமானவா எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே.

தாயுமானவர் தம்முயிர்போல் எவ்வுயிருந் தான்ென்றுதண்ணருள்கூர் செம்மையருக்கு ஏவல் என்று செய்வேன் பராபரமே.

- -தாயுமானவர் * கடவுளே, என்னைப் பொய்யிலிருந்து மெய்க்கு அழைத்துச் செல்லும் இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்லும்; மரணத்திலிருந்து அமரத்துவத் துக்கு அழைத்துச் செல்லும். கி