பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 121

அருள் வள்ளலே, உம்மை அடைய அருளும், என் னகத்தே எழுந்தருளும், அப்பொழுது நான் தூய்மை பெறுவேன். -உபநிடதம்

அழியாத பரம் பொருளே! நீரே எல்லோர்க்கும் நண்பர். உம்முடைய அடியார்க்கு உம்மைத் தவிர வேறு புகலிடமில்லை. -பாகவதம்

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை, மற்றது வேண்டாமை வேண்ட வரும். -வள்ளுவர்

எத்தனைச் சடங்குகளையும் ஆராதனைகளையும் எவ் வளவு ஒழுங்காகச் செய்தாலும் இதயத்தில் உண்மை இல்லையாயின் எள்ளளவும் பயன் தரா. இறைவனை ஏமாற்றுவதே யாகும். சி

கடவுளிடம் கூப்பாடு போடவும் வேண்டாம், கை களைத் தட்டவும் வேண்டாம், மிகச் சிறிய ஒலியும் அவர்க்குக் கேட்கும். 3ی

அருட்கடலாகிய அஹரை மஜ்தா, என்னுடைய மனம் மொழி மெய் ஆகியவற்றின் தூய்மையை உமக்கு அர்ப்பணம் செய்கிறேன். அறத்தையே புகழ்கின் றேன். என் உடலை உம் உடலாக எண்ணுகின்றேன்.

ஜா அஹரை மஜ்தாவுக்குச் செய்யும் வழிபாடு யாது? அறவோர்க்கு ஊழியம் செய்வதே. அறவோரே அஹரை மஜ்தாவின் அவதாரமாவர். ஜா

சிந்தையாலும் செயலாலும் தீமையை எதிர்க்கவும், மக்களுக்கு நன்மையைக் காட்டவும் செய்வதே ஒ, அஹரை மஜ்தா, உமக்குச் செய்வதற்குரிய வழிபாடு என்பதை உணர்ந்தேன். ஜா