பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

சர்வ சமயச் சிந்தனைகள்

பிறர்க்காகப் பிரார்த்தனை செய்பவனுடைய பிரார்த் தனையே கேட்கப்படும். 6了

பிரார்த்தனை மண்டபத்தின் வாயில் சில சமயம் திறந்திருக்கும், சில சமயம் முடியிருக்கும், ஆனால் கழி விரக்கத்தின் வாயில் எப்பொழுதும் திறந்தேயிருக்கும். எ

பிரார்த்தனை என்பது இதயம் செய்யும் வழிபாடாகும்.

4 GT

கடவுளே, என்னைச் சோதியும், என் இதயத்தைத் துருவும், என் எண்ணங்களை அறியும், என்னை அறநெறியில் இட்டுச் செல்லும். 6了

கடவுளே, கையால் வேலை செய்து இன்பம் தேடு வதே உம்முடைய அருட் பிரசாதம். GT

ஒதியே சுருதி தினந்தினம் படித்தும்

உணர்விலாது உலகொழுக்கு உவந்து தீதிலே பயின்று செந்நெறி யிகந்த தீயனேன் உய்யுமா றறியேன் கோதிலா நீதிக் கொழுங்கதிர்ப் பிழம்பே குணிப்பருங் கருணை வாரிதியே ஆதியே அடியேன் நின்சரணடைந்தேன்

அஞ்சல் என்று அடைக்கலம் அருளே.

கி -கிருஷ்ணப்பிள்ளை

செபஞ் செய்யுங்கள், கவனமாயிருங்கள், ஆசை வயப்படாமல் காத்துக்கொள்ளுங்கள், ஆன்மா அறத் தில் நிற்க விரும்பினும் உடல் ஆற்றலற்றது ஆகலின்கி கடவுளே, உலகநாயகனே போற்றி, கருணாமூர்த்தியே

போற்றி, இறுதி நாளில் தீர்ப்பளிக்கும் இறைவனே போற்றி, உன்னையே வணங்குவோம், உன்னையே