பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 23

১৫

உண்மையான அறம் நீர்போல் தீமை செய்யாமல் நன்மையே செய்யும், நீர்போல் தாழ்ந்த இடத்தில் நின்று பரம்பொருளை ஒக்கும். தா தீமையை மறைவாகச் செய்பவனைக் கடவுள் தண்டிப் பார், மறைவின்றிச் செய்பவனை மக்கள் தண்டிப்பர், கடவுளையும் மக்களையும் அஞ்சி நடப்பவன் தனியே நடக்க வல்லவன். தா

அறத்திடம் அசையாத நம்பிக்கை உடையவனால் ஆகாத காரியம் எதுவும் கிடையாது. தா

அறநெறியில் நிற்பதாக ஆணவம் கொள்ளாதவரே யாவராலும் அன்பு செய்யப்படுவர். தா

அறநெறி நிற்போர் அனைவரும் குழந்தை உள்ளம் உடையவர். தா அறத்தை விரும்புவோர் கடமைகளைச் செய்வர், அறத்தை விரும்பாதவர் உரிமைகளைக் கேட்பர். தா

அறம்

நன்மை செய்பவன் நல்ல குணமுடையவனாக ஆகி விடுவான். தீமை செய்பவன் தீயகுணமுடையவனாக ஆகிவிடுவான். எதைச் செய்கிறானோ அதுவாக ஆகி விடுவான். - வேத ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஒம்பப் படும். - வள்ளுவர்

செல்வத்தை மட்டும் இழந்தவன் எதையும் இழந்த வனாகான், ஆனால் ஒழுக்கத்தை இழந்தவனோ அனைத்தையும் இழந்தவனே. மனிதன் வளர்வதும் முன்னேறுவதும் அறத்தினா லேயே; பிறர்க்குத் தீங்குச் செய்யாதிருப்பதே அறம், அறமே உலகத்தைத் தாங்கி நிற்பது.