பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

süa soué 85ssosnssi

எது உனக்குத் துன்பமாயிருக்குமோ அதைப்பிறர்க்குச் செய்யாதே, அதுவே அனைத்தறன். - மகாபாரதம்

அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன் ஆகுல நீர பிற. கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. - வள்ளுவர் பொய் குறளை வன்சொல் பயனில-என்றிந் நான்கும் எய்தாமை சொல்லின் வழுக்காது - மெய்யிற் புலமைந்துங் காத்து மனமா சகற்றும் - நலமன்றே நல்லா றெனல். - குமரகுருபரர்

அறிவும் அறமும் உடையவனாய், உண்மை உரைப் பவனாய், நடுநிலைமை தவறாதவனாய், தன் கருமத் தில் கண்னுடையவனா யிருப்பவனைப் பெரியோர் கள் போற்றுவர். பெள

குலமும் குடியும் பெருமை தருவதில்லை, பெருமை தருவன உண்மையும் ஒழுக்கமுமே. - பெள

இனியவை கூறல், நல்லன ஈதல், உதவி செய்தல், நடுநிலை நிற்றல், இவற்றால்தான்் உலகம் உள்ள தாகும். பெள

ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர், ஆற்ற்ா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை. பெள

கழிபெருஞ் செல்வக் கள்ளாடு அயர்ந்து மிக்க நல்லறம் விரும்பாது வாழும் மக்களிற் சிறந்த மடவோருண்டோ? பெள