பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 29

.

கடவுளை உன் இதயம் முழுவதையும் கொண்டு நேசிப்பாய். இது முதற் கட்டளை. இதுபோன்ற இரண்டாவது கட்டளை, உன்னைப்போலவே பிறரை யும் நேசிப்பாய். இந்த இரண்டு கட்டளைகளிலும் எல்லா அறநூல்களும் அடங்கும். கி

நேரன வாயில் வழிப் புகுக. அழிவுக்குச் செல்லும் வழியும் அகலமானது. வாயிலும் அகலமானது. அதன் வழிச் செல்வோர் பலராவர். அறத்துக்குச் செல்லும் வழி நேரானது, குறுகியது, அதில் செல்வோர் சிலரே.

கி.

அறம் செய்க. அறம் செய்பவரையே அல்லா விரும்புகிறார். இ

அறத்தில் உயர்ந்தது எது? மக்களிடையே சமாதான்ம் நிலவுமாறு செய்வதே. - இ அனாதைக் குழந்தைகளைக் காப்பாற்றுகிற விடே அல் லாவுக்கு மிகவும் பிரியமான வீடு. இ

மக்களில் மிகக் கெட்டவன் எவன் என்று கூறட்டுமா? உதவி கேட்கும்போது ஒன்றும் கொடாதிருப்பவனே.

அறநெறி என்பது இதுவே:கடவுளிடம் உண்மையான பக்தி, தன்னை ஒறுத்தல், எல்லோரிடமும் நீதிசெய்தல், பெரியோரைப் பேணுதல், சிறியோரிடம் அன்பு செய் தல், ஏழைகளிடம் இரக்கம் கொள்ளுதல், நண்பர்க்கு நல்லுரை கூறுதல், பகைவனிடம் பொறுமை. இ

அழியா இன்பம் தரும் அறநெறி குறுகியது, கடுகளவு

அகலம் கூட இராது. ஆனால் மனமோ யானை அளவு,

பெரியது. அது எப்படி அந்த நெறியில் செல்ல முடியும்? t பெள உடலினுள் நன்மை தீமை என்னும் உடன் பிறந்தார் இருவர் உளர். -

பென