பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்வ சமயச் சிந்தனைகள்

கடவுள் ஒருவனை அழிக்க விரும்பில்ை முதற்கண் அவனை அறத்தை இழக்குமாறு செய்கிறார். பெள சிறதே உண், சிறதே உறங்கு, பொறுமையையும் கருணையையும் பூண்டுகொள்.

அறிஞர் அறிவில்லாதவன் தன் அறியாமையை அறிந்தால் அந்த அளவுக்கு அறிவுடையவனே.

அறிவு சென்ற விடத்தால் செலவிடாது தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு. - குறள

பெள

பெள

அறிவினல் ஆகுவ துண்டோ, பிறிதின்நோய் தன்நோய்போல் போற்றாக் கடை. - குறள

அறிவினுளெல்லாம் தலையென்ப,தீய செறுவார்க்கும் செய்யா விடல். - குறள்

தீ யொழுக்கத்தை விட்டவன் அறிஞன், தீ யொழுக் கத்தை விடாதவன் அறிவிலி. عE

கற்கக் கற்க நிறையாதது அறிவு. கற்பிக்கக் கற்பிக்கச்

சோர்வடையாதது அன்பு. பெள

அறிஞர் சிந்தனை செய்யாதிருந்து அறிவிலிகள் ஆகின் றனர். அறிவிலிகள் சிந்தனை செய்து அறிஞர் ஆகின் றனர். பெள அறிஞர் செய்யத் தக்கதை அறிவர், அறிவிலார் நலம்

தருவதை அறிவர். பெள

நீ அறியும் போது அறிவதாக அறிவதும், அறியாத போது அறியாததாக அறிவதுமே உண்மையான அறி வாகும். பெள